மூக்குத்தி அம்மன்.. என்னாது நயன்தாராவின் ஹீரோவாகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த எல்.கே.ஜி படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

Nayanthara to act with RJ Balaji in Mookuthi Amman movie

படத்தின் பெயர் தான் மூக்குத்தி அம்மன் என்றும், ஆனால் அது சாமி படம் இல்லையென்றும் படக்குழு தெரிவித்துள்ளது. எல்.கே.ஜியைப் போன்றே இப்படமும் சமூக பிரச்சினை பற்றித் தான் பேசுகிறதாம்.

இப்படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில், அதாவது படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாம் படக்குழு. ஏற்கனவே, நயன்தாராவுடன் நானும் ரவுடிதான், வேலைக்காரன் போன்ற படங்களில் காமெடி வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார்.

Nayanthara to act with RJ Balaji in Mookuthi Amman movie

அதோடு ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போதும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன். எனவே, நிச்சயம் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என படக்குழு நம்புகிறது.

ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயனை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு தனியாக ஒரு பாடல் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமும் ஆனது.

எனவே, அதே போல் மூக்குத்தி அம்மன் படத்திலும் நயன் இமேஜ் பார்க்காமல் நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. அதிகாரப்பூர்வமாக அறித்தால் தான் நயன் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X