புதுமுக இயக்குனர் உடன் இணையும் நயன்தாரா.. பூஜையுடன் தொடங்கவுள்ள படப்பிடிப்பு
சென்னை: நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு காத்துள்ள திரைப்படம் நெற்றிக்கண்.
அவள் படத்தின் இயக்குனரான மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கியுள்ள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இதுபோக நயன்தாராவின் படவரிசை ஒரு புறம் நீண்டு கொண்டே போகிறது. அவரின் மார்கெட்டும் உயருகிறது.

நிறைவு பெற்றது
2011ம் ஆண்டு வெளியான "ப்ளைண்ட்" என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே நெற்றிக்கண் திரைப்படமாகும். நெற்றிக்கண் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக காத்துள்ளது. இந்த படத்தின் டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இது மட்டுமன்றி நயன்தாரா 6 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் முன்னர் வெளியாகின. ஆனால் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தமிழில் ஒரு படம் நிவின் பாலி உடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஷாருக்கான் ஜோடி
சமீபத்தில் இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்தும் படக்குழு இன்னும் அதிபார்ப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சினிமா வட்டாரங்கள்
இந்நிலையில் S R பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் போட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அந்த இரண்டு படத்தில் ஒரு படத்தை புது முக இயக்குனர் விக்னேஷ் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜூலை 15ம் தேதி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











