ட்விட்டர் டிரெண்டிங்கில் நயன்தாரா... தெறிக்க விட்ட நெட்டிசன்கள்... காரணம் இது தானா
சென்னை : காதலர் தினமான இன்று லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்து, இணையத்தை கலக்கி வருகிறார்.
காதலர் தினமான இன்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளதாக ஏற்கனவே விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இன்று இரவு 7 மணிக்கு இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியிட உள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல்
இது விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் காதலர் தின திட்டம் என்று வேறு விக்னேஷ் சிவன் கூறி இருந்ததால் அப்படி என்ன இருக்கிறது அதில் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இணையத்தை கலக்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இதற்கிடையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உடையில் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறி இருந்தார். இந்த போட்டோவை பதிவிட்ட 20 நிமிடங்களில் 50,000 க்கும் மேல் லைக்களை அள்ளியது.

திடீரென டிரெண்டிங்கான நயன்தாரா
காத்து வாக்குல ரெண்டு காதல் படம், காதலர் தின வாழ்த்து என சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பிடித்தது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இந்நிலையில் திடீரென ட்விட்டரில் நயன்தாரா பெயரில் ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் நயன்தாரா காதல் கொண்டாட்டம்
தமிழ்நாடு டிரெண்டிங்கில் நயன்தாரா தான் டாப். இந்த ஹாஷ்டாக்கில் இது வரை 5600 க்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். இதில் அதிகமாக பதிவிடப்பட்டுள்ளது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தான்.


Click it and Unblock the Notifications











