அட தரமான சம்பவம்..குந்தவையுடன் இணையும் நயன்தாரா..ஹீரோ யார் தெரியுமா?
சென்னை : த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது என அனைவரும் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டி உள்ளனர்.
30ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

த்ரிஷா,நயன்தாரா
தமிழ் சினிமாவின் எவர் கிரின் நடிகைகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவை இணைந்து நடிக்க வைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போனது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட நயன்தாரா, த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது முடியாமல் போனதால், சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

லண்டனில் படப்பிடிப்பு
தற்போது நயன்தாராவும் த்ரிஷாவும் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. த்ரிஷா தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் கதாநாயகனாக நடிக்கும் மலையாளப் படமான ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ராம் படத்தில்
தயாரிப்பாளர் ரெட் கார்பெட் சுரேஷ்க்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் இணைந்து ராம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் இறுதியில் வரும் நயன்தாரா அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜவான் படத்தில்
நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜவான் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சியை படமாக்க ஷாருக்கான் சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











