அதெப்டி என்னைக் கேட்காம இப்படி பத்திரிகை அடிக்கலாம்? - முருகதாஸ் மீது நயன் கோபம்

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார் ராஜாராணி பட பிஆர்ஓ.
'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன.
இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது 'ராஜாராணி' படத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் அது என்று கூறினர்.
இந்தப் படத்தை ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பவர் ஏஆர் முருகதாஸ். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக இப்படி ஒரு போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு விளம்பரம் தேடினார்.
முதலில் நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறினர். ஆனால் உண்மையில் அவர் அனுமதி எதுவும் அளிக்கவில்லையாம்.
தன்னைக் கேட்காமல் இப்படிச் செய்த இயக்குநர் முருகதாஸ் மீது கடும் கோபம் கொண்ட நயன், அவரை போனில் சத்தம் போட்டதோடு, படத்தின் விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சியையும் புறக்கணித்துவிட்டாராம்!


Click it and Unblock the Notifications











