Nayanthara: ஓ நயன்தாரா குழந்தைகள் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா.. என்னம்மா விளக்குறாரு!

சென்னை: நடிகை நயன்தாரா என்ன செய்தாலும் அது டிரெண்டாகுதோ இல்லையோ பெரிய பஞ்சாயத்தையோ சர்ச்சையையோ கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. வாடகைத் தாய் மூலம் நடிகை நயன்தாரா இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானதே பெரிய பஞ்சாயத்தை கூட்டியது.

சட்டப்படி நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றாரா? சட்டத்தில் இடம் இருக்கா என அனைவரும் வக்கீல் கோட்டை மாட்டிக் கொண்டு கேள்வி எழுப்ப நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி 6 வருஷம் ஆகுதுன்னு ஒரே போடாக போட்டு அனைத்து சர்ச்சைகளுக்கும் நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்தார்.

Nayanthara twin baby names explanation tweet goes trending

ஆனால், அத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் இப்போ அனைவரையும் கூட்டி திருமணம் செஞ்சீங்க என்றும் அதனால் தான் நெட்பிளிக்ஸ் உங்கள் திருமண வீடியோவை வெளியிடவில்லையா என அதற்கும் ஒரு பஞ்சாயத்து கிளம்பியது.

இந்நிலையில், அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு சமீபத்தில் நடந்த பிஹைண்ட்வுட்ஸ் விருது விழா நிகழ்ச்சியில் தனது குழந்தைகளின் முழு பெயரை நயன்தாரா தொகுப்பாளர்கள் கேட்கிறார்களே என்பதற்காக ரிவீல் செய்த நிலையில், பலரும் குழந்தைகளின் பெயர்களை வைத்து கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

உயிர் மற்றும் உலகம் என வித்தியாசமான தமிழ் பெயர்களை நயன்தாரா தனது குழந்தைகளுக்கு சூட்டி உள்ளார் என ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், உயிர் என்கிற பெயருடன் சேர்ந்து அந்த குழந்தையின் முழுப்பெயர் உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் உலகம் என அழைக்கப்பட்ட குழந்தையின் முழுப்பெயர் உலக் தெய்வீக் N சிவன் என்பதை ரிவீல் செய்திருந்தார் நயன்தாரா.

Nayanthara twin baby names explanation tweet goes trending

நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும் நிலையில், இது என்னடா பெயர் புதுசா இருக்கே? என குழந்தைகளின் பெயர்களை வைத்து ஏகப்பட்ட விவாதங்கள் சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.

இந்நிலையில், அந்த குழந்தைகளின் பெயர்களுக்கு பின்னாடி இப்படியொரு அர்த்தம் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்றும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Nayanthara twin baby names explanation tweet goes trending

அதில், நயன்தாராவின் குழந்தைகளுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே பார்க்கலாம்..

"ருத்ரன்+இல் = #ருத்ரோனில்

சிவன் வாழும் இல்லம் என பொருள்..

உலகாளும்+தெய்வம்= #உலக்தெய்வீக் ,

உலகளந்த உத்தமனான எம்பெரும்பான் லோகநாதன் கிருஷ்ணனின் பெயரையும் சூட்டியுள்ளார்கள்..

விவரம் தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு.." என ட்வீட் போட்டுள்ளார்.

உண்மையாகவே இதுதான் நயன்தாரா குழந்தைகளின் பெயருக்கான அர்த்தமா என்றும் ரசிகர்கள் குழம்பிப் போய் வருகின்றனர். அந்த N சிவன் என்பது மட்டும் நயன்தாரா சிவன் என புரிகிறது. மற்றபடி ஏதும் விளங்கல பாஸ் என அவரது ட்வீட்டுக்கு கீழும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், ஜெயம் ரவி உடன் அவர் இணைந்து நடித்துள்ள இறைவன் திரைப்படமும் போஸ்ட் புரொடக்‌ஷனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சில புதிய படங்களிலும் நடிகை நயன்தாரா கமிட் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X