twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழனி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா - உதயநிதி... பார்க்கத் திரண்ட 'பக்தர்கள்'!

    By Shankar
    |

    பழனி: இது கதிர்வேலன் காதலி படத்தின் படப்பிடிப்புக்காக பழனி வந்த நயன்தாரா, மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அவருடன் ஹீரோ உதயநிதியும் ஜோடியாகச் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இது கதிரிவேலன் காதல்

    இது கதிரிவேலன் காதல்

    திண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோம்பைபட்டியில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்' படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

    எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நயன்தாரா ஆசை

    நயன்தாரா ஆசை

    இதற்கிடையில் பழனி முருகனை தரிசிக்க வேண்டும் என தனக்கு நீண்ட நாட்களாக ஆசை என நயன்தாரா சொன்னதால், கோவில் நிர்வாகத்துக்கு முன்கூட்டியே சொல்லி சிறப்புத் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்.

    உதயநிதி - நயன்தாரா ஜோடியாக...

    உதயநிதி - நயன்தாரா ஜோடியாக...

    நேற்று இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு குழுவினருடன் நடிகை நயன்தாரா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு ரோப்கார் மூலம் வந்தனர். பின்னர் அவர்கள் மலைக் கோவிலில் உள்ள ராஜ அலங்காரத்தில் இருந்த முருகப் பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    படம் எடுக்க எதிர்ப்பு

    படம் எடுக்க எதிர்ப்பு

    உதயநிதி ஸ்டாலினை புகைப்படம் எடுப்பதற்கு அவருடன் வந்த உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நயன்தாராவையும் எடுக்க விடவில்லை.

    மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் திரண்டனர்

    பக்தர்கள் திரண்டனர்

    நடிகை நயன்தாரா வந்திருப்பது குறித்து அறிந்த 'பக்தர்கள்' முருக தரிசனத்துக்கு நின்ற க்யூவிலிருந்து ஓடிவந்து நயன்தாரா - உதயநிதி ஜோடியை தரிசிக்க திரண்டனர்.

    இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து வேகமாக காரில் ஏறி ஓட்டலுக்குப் பறந்தனர்.

    English summary
    Nayanthara - Udhayanidhi have a Dharshan of Lord Muruga at Palani hill temple on Monday evening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X