Don't Miss!
- News
தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்துறீங்களா? அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது.. நீதிபதிகள் பளீர்
- Finance
H-1B visa: அலேக்கா தூக்கும் 3 நிறுவனங்கள்.. இந்திய நிறுவனங்கள் ஆதிக்கமா? உண்மை என்ன?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பாலியல் போதை அதிகமாக இருக்காம்... ஜாக்கிரதை!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Sports
"பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க" ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஷ் ராஜா சுவாரஸ்ய கருத்து!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்பா.. என்னம்மா சிரிக்கிறாரு நயன்தாரா.. கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர்.. கூடவே விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ இன்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது.
தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் தியேட்டருக்கு வந்து நடிகை நயன்தாரா ப்ரமோஷன் செய்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார்.
ப்பா.. புசுபுசுன்னு ஆளே மாறிய நயன்தாரா.. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படியொரு போட்டோவா?

பயமுறுத்தும் பேய் படம்
99 நிமிடங்கள் எந்தவொரு இடைவேளையும் இல்லாமல் நயன்தாராவின் பேய் படமான கனெக்ட் வெளியாகும் என தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் அப்படி அந்த படத்தில் என்னப்பா இருக்கு என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக இந்த கனெக்ட் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ரீமியரில் நயன்தாரா
இந்த ஆண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா தியேட்டருக்கு சென்று பார்க்கும் படம் என்றால் அது கனெக்ட் தான். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா செம ஹாப்பியாக கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

என்னம்மா சிரிக்கிறாரு
லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா.. பாருங்க என்னம்மா சிரிக்கிறாரு நயன்தாரா என புசுபுசு கன்னங்களுடன் நயன்தாரா புதிய லுக்கில் ரசிகர்களை நோக்கி கை அசைப்பதும், சிரிப்பதுமாக உள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் லேடிசூப்பர்ஸ்டார் ஹாஷ்டேக் உடன் டிரெண்டாகி வருகிறது.

கணவர் விக்னேஷ் சிவன்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவை கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இணைந்து பார்த்துள்ள புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் விக்னேஷ் சிவன்.

இன்டர்வெல் இருக்கு
இடைவேளை இல்லாமல் கனெக்ட் படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாது என தியேட்டர் நிர்வாகம் கிளப்பிய பிரச்சனை பெரும் பஞ்சாயத்தை கூட்டியது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவும் நயன்தாராவுக்கு விருப்பம் இல்லாத நிலையில், இன்டர்வெல் உடன் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் டிசம்பர் 22ம் தேதி கனெக்ட் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

ஹிட் அடிக்குமா
இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக மாறியது. அதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ2, காட்ஃபாதர், கோல்டு உள்ளிட்ட படங்கள் சொதப்பின. இந்நிலையில், கனெக்ட் படம் நயன்தாராவுக்கு ஆண்டு இறுதியில் பெரிய வெற்றியை கொடுக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

யாரெல்லாம் இருக்காங்க
கனெக்ட் படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், சத்யராஜ், வினய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லாக்டவுன் சமயத்தில் ஒரு கான்ஃபெரன்ஸ் காலில் பேய் சத்தம் கேட்பதாக ஆரம்பிக்கும் டிரைலர் மற்றும் அம்முவுக்கு எக்சார்சிஸம் பண்ண வரும் அனுபம் கெர் என டிரைலரே திகில் கிளப்புகிறது.