வாவ் என்ன ஒரு அழகு.. மலையாள பட ஷூட்டிங்கில்.. எடுக்கப்பட்ட நயன்தாரா வீடியோ.. வேற லெவலில் வைரலாகுது!
சென்னை: நிவின் பாலியின் லவ் ஆக்ஷன் டிராமா பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
லாக்டவுனில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் ஒன்றாக இருந்து பொழுதை கழித்து வருகிறார் நடிகை நயன்தாரா.
நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

கொரோனா வதந்தி
தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாராவுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக சமீபத்தில் வதந்தி ஒன்று தீயாய் பரவியது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தைகள் போல மாறி பாட்டு பாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

லிவ் இன் டுகெதர்
நடிகை நயன்தாரா கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். ஆனால், இருவருக்கும் எப்போது திருமணம் என்பது இன்னும் முடிவாகவில்லை. விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள தான் தயார் என சில விருது விழா நிகழ்ச்சிகளில் மறைமுகமாக நயன்தாரா வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த லாக்டவுனில் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைரலாகும் வீடியோ
நடிகர் நிவின் பாலியின் லவ் ஆக்ஷன் டிராமா எனும் மலையாள படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்தது. இந்நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஜு வர்கீஸ், நயன்தாரா செட்டில் செம கேஷ்வலாக, நிவின் பாலி உள்ளிட்ட படக்குழுவினருடன் அழகாக சிரித்துப் பேசும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

சிரிப்பழகி
தலைவி நயன்தாராவின் க்யூட் ரியாக்ஷன் மற்றும் சிரிப்பழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் அந்த வீடியோவை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். நேற்று வெளியிடப்பட்ட அந்த த்ரோபேக் வீடியோ கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று, வேகமாக பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது.

வீணாகும் கால்ஷீட்
ஆர்.ஜே. பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன், விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், ரஜினிகாந்தின் அண்ணாத்த என கைவசம் பல படங்கள் இருந்தாலும், தொடரும் இந்த லாக்டவுனால் கிட்டத்தட்ட நயன்தாராவின் ஒரு வருட கால்ஷீட் வீணாகும் நிலை உருவாகி இருக்கிறது. நயனை போலவே பல பெரிய நடிகர்களின் கால்ஷீட்டும் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

ஓகே சொல்வாரா
கோபி நயினார் இயக்கத்தில் அறம் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா நடிப்பார்கள் என்ற வதந்தி சமீபத்தில் வைரஸ் போல பரவியது. ஆனால், இயக்குநர் கோபி நயினார், நயன்தாரா இல்லாமல், அறம் 2 எப்போதுமே உருவாகாது எனக் கூறியுள்ளார். இந்நிலையில், அறம் 2 படத்திற்கு நயன்தாரா ஓகே சொல்வாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications











