Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஹனிமூன் கொண்டாட்டம் ஓவர்… அடுத்து என்ன... நயன்தாரா – விக்கி ரிசப்ஷனா?
சென்னை : புதுமணத் தம்பதிகளான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் ஹனிமூனை மூடித்துவிட்டு ஊர் திரும்பி உள்ளனர்.
நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனாலும் ஆச்சு.. நயன்தாரா அங்கே போனார்.. நயன்தாரா இங்கே போனார் என, இந்த மாதத்தின் ஹாட் டாப்பிக்காகவே இருந்தார். தற்போது ஒரு வழியாக தங்களது ஹனிமூனை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு ஹாட்டாலுக்கு பை சொல்லிவிட்டு ஊர் திரும்பி உள்ளனர்.
இனிமேலாவது நயன் விக்கி புராணம் ஓயும்னு பாத்தா அடுத்ததாக ரிசப்ஷன் இருக்கா? இல்லையா? என்று கேட்டு வருகின்றனர். இந்த கேள்வி நமக்கே கண்ணகட்டுதுனா நயன்தாரா விக்கி எப்படி இருக்கும்.
விக்ரமின் 'கோப்ரா' வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய உதயநிதி!

காதல் மலர்ந்தது
போடாபோடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன். நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வரும் "தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே" என்ற பாடல் விஜய்சேதுபதிக்கு ஒர்க்கவுட் ஆட்சோ இல்லையோ விக்னேஷ் சிவனுக்கு நல்லா ஒர்க்கவுட்டாகி இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு.

க்யூட் ஜோடி
இதையடுத்து, அனைவரின் கண்படும் அளவுக்கு இருவரும் க்யூட் ஜோடியாக வலம் வந்தனர். கோவில்கள், சினிமா நிகழ்ச்சி, குடும்பவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என எதுவானாலும், இவர்கள் இருவரும் கைபிடித்துக்கொண்டு நிற்ப்பதை பார்த்தால், அடடா....காதலித்தால் இப்படி காதலிக்க வேண்டும் என்று காதலிக்கும் இளசுகளுக்கு சற்று பொறாமையாவே இருக்கும்.

ஒரு பைசாகூட செலவு இல்லை
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதல் புறாவாக சுற்றிவந்த இந்த காதல் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். மகாபலிபுரம் ரிசாட்டில் தடபுடலாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களில் திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, விஜய் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கோலிவுட்டே மூக்கில் கை வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தாலும், திருமணத்திற்காக ஒரு பைசாவைக்கூட நயன்தாரா செலவு செய்யவில்லையாம். அனைத்து செலவையும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஏற்றுக்கொண்டதாம்.

தாய்லாந்தில் ஹனிமூன்
ஏராளமான திரைப்படங்கள் கைவசம் இருப்பதால், ‘நோ‘என்று சொல்லி வந்த ஜோடி சத்தமே இல்லாமல் தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினார். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி நயன்தாராவுடன் இருக்கும் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து ஹனிமூனை முடித்துக்கொண்டு இருவரும் ஊர் திரும்பி உள்ளார்.

அடுத்து என்ன பிளான்
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ந் தேதி திருமணம் நடைபெற்றது அன்று மாலை ரிசப்ஷன் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து, நயன்தாரா மேடம் அடுத்து என்ன பிளான் ரிசப்ஷனா? படப்பிடிப்பா என்று கேட்டு வருகின்றனர். ஆனால், ரிசப்ஷன் ஏதும் இல்லை என்றும், ஹைதராபாத்தில் நடந்து வரும் ஜவான் திரைப்படத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.