வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன் மகன்கள்.. நயன்தாரா வைத்த பொங்கலை பாருங்க.. சூப்பர் குடும்பம்!
சென்னை: நடிகை நயன்தாரா விக்னேஷ் தம்பதியர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் தம்பதியர்கள். இவர்கள் எது செய்தாலும் பரபரப்பைக் கிளப்பும் செய்தியாக மாறிவிடுகின்றது, அல்லது இவர்களை அந்த பரபரப்புக்கும் காரணமாகிவிடுகின்றார்கள். இப்படியான நிலையில் இவர்கள் வீட்டில் குடும்பமாக இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நயன் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவ்வளவுதான் நயன் இனி தனது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வதில்தான் அதிக நேரம் செலவழிப்பார் என்ற பேச்சுகள் எழுந்தது. இப்படியான நிலையில் ராக்காயி படத்தின் அறிவிப்பு வெளியானது. இதுமட்டும் இல்லாமல், மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் படத்திலும் நயன் கமிட் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு இவரது திருமணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், தனுஷிடம் பகையாளியாக மாறிவிட்டார் நயன். இவர்களின் பகை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

நயன் சிறந்த நடிகை, மட்டும் இல்லாமல் மிகவும் தைரியமான பெண்ணாகவும் திரைத்துறையில் உள்ளார். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து இன்றைக்கு அவர் அடைந்துள்ள இடத்தில் தொழில் ரீதியான போட்டிகள் சவால்கள் மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் அவரது சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளார். அதுவும் திரைத்துறையினருக்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கும் தெரிந்த விஷயங்கள்தான்.

நயன் - விக்கி: நயன், நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு அவரைத் திருமணமும் செய்து கொண்டார். நயன் - விக்கி தம்பதியர்களுக்கு, உயிர் மற்றும் உலக் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். ஜாலியான குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தங்களது குடும்பத்தில் யாருக்கு பிறந்த நாள் என்றாலும் சரி, ஆண்டில் மிகவும் முக்கியமான நாட்கள் என்றாலும் சரி, வெளிநாட்டிற்குச் சென்று கொண்டாடிவிட்டுத்தான் வருவார்கள். அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கூட, துபாய்க்குச் சென்றிருந்தனர்.

பொங்கல்: பல விழாக்களை தங்களது வீட்டிலேயே இவர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இப்படியான நிலையில் இவர்கள் இந்த ஆண்டு பொங்கலை தங்களது வீட்டில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள். குறிப்பாக தங்களது குழந்தைகளுக்கு வேட்டி அணிவித்து அட்டகாசப்படுத்தியுள்ளார்கள். குடும்பத்தலைவராக விக்னேஷ் சிவன் பூஜை செய்ய, நயன் பயபக்தியோடு சூரியனை வழிபடுகின்றார். இது தொடர்பான புகைப்படங்களை நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.

நன்றி: மேலும் இந்த புகைப்படங்களுக்கு, நயன், "உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல் ❤️ நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🏻🙏🏻 Happy pongal from us to you😇😇🙏🏻🙏🏻" என கேப்ஷன் இட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











