Nayan Wikki: 1000% ரொமான்ஸ்.. நயன் விக்கி லவ்வை பொழியுறாங்களே.. காதலர் தின கொண்டாட்டம்!
சென்னை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவில் இருக்கும் காதல் ஜோடிகளில் மிகவும் முக்கியமான காதல் ஜோடியாக உள்ளார்கள். இவர்களின் காதல் கதை தொடங்கி, கல்யாணக் கதை, குழந்தைகளைப் பெற்றெடுத்த கதை என அனைத்துமே, மக்கள் மத்தியில், பெரும் கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றது. இந்நிலையில், இருவரும் இன்று அதாவது, பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தை செம ரொமான்ஸாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
தங்களின் காதலர் தினக் கொண்டாட்டம் தொடர்பாக நயன் மற்றும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும், லவ் இன்சுரன்ஸ் கம்பனி படத்தில் இடம் பெற்றுள்ள, பாடலான உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா பாடலை இணைந்து பாடி வெளியிட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக, இருவரும் செம ரொமான்ஸாக பாடி வீடியோ வெளியிட்டு உள்ளனர். மேலும் இந்த பதிவுக்கு விக்னேஷ் சிவன், " எனது சுத்தமான தங்கத்துடன் 10வது ஆண்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறேன். கடந்த 3650 நாட்களுக்கும் மேலாக எனக்கு நாளுக்கு நாள் அதிகம் காதலால் என்னை நிரப்பி வரும் காதல் மனைவிக்கு நன்றி.

கடவுள் இந்த அன்பை தொடர்ந்து நமக்கும் நமது குழந்தைகளுக்கும் கிடைக்க அருள் புரிவார் என வேண்டிக் கொள்கிறேன். என் இதயத்தில் இருந்து காதல் நேரடியாக உனக்கு வந்து சேரட்டும். லவ் யூ உயிர் & உலக்" எனப் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











