Nayanthara: 3 குரங்குகள் சர்ச்சை.. ஏர்ப்போர்ட்டில் திடீர் சந்திப்பு.. மகன்களை பற்றி நயன்தாரா சொன்ன மேட்டர்!

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படுகிற மற்றும் விரும்பப் படுகிற தம்பதியர்களில் ஒரு தம்பதி. இவர்களுக்கு உயிர் , உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை. இவர் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்திவேல் குறித்து மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். அதாவது அவர்கள் மூன்று பேரையும் மூன்று குரங்குகள் என்று விமர்சித்தார். அதற்கு வலைப்பேச்சு டீம் தொடர்பாக பல பேட்டிகள் தொடங்கி அவர்களின் சேனலிலுமே கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டது.

Nayanthara Vignesh Shivan Couple Meets Valai pechu Team Bismi Anthanan Sakthi After Three Monkey Issue

இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி இருந்த நிலையில், அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் என வலைப்பேச்சு டீம் துபாய் விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக பேசி சிரித்தது தொடர்பான வீடியோவையும் பிஸ்மி பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் நயன் - விக்கியின் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் குறித்தும், அவர்கள் இருவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள் என்றும் நயன் மற்றும் விக்கியிடம் தெரிவித்தனர். அப்போது, நாங்கள் வீட்ட்டில் தமிழ் தான் பேசுகிறோம், தமிழ் தான் கற்றுக் கொடுக்கிறேம் என்று தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் வலைப்பேச்சு டீமை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X