நயன்தாரா- விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் ஹனிமூன்.. தீயாய்பரவும் புகைப்படங்கள்!
சென்னை : நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
20 புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலியை கட்டினார். நெட்பிளிக்ஸ் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பு உரிமையை வாங்கி உள்ளதால், ஓரிரு திருமண புகைப்படம் மட்டுமே இணையத்தில் வெளியானது.

200 பேருக்கு அழைப்பு
திருமணத்திற்கு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், விஜய், விஜய்சேதுபதி, சரத்குமார், கேஎஸ் ரவிக்குமார், அஜித்தின் மனைவி என ஏராளமான நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தடபுடலான நடந்த திருமணம்
திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருந்தனர். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரம் செய்த காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்திருந்தனர். இவர்களின் திருமணம் சினிமாத்துறையே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு தடபுடலாக நடைபெற்றது.

திருப்பதியில் சாமி தரிசனம்
திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு இருவரும் ஜோடியாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் கேரளா சென்றனர். அம்மாவின் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தனர்.

ரெஸ்டாரெண்டில்
நயன்தாரா தனது கணவர் மற்றும் அம்மாவுடன் கேரளாவில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும்,
ரெஸ்டாரெண்டின் ஸ்பெஷல் ஐட்டங்களான கீ ரைஸையும் சிக்கன் கறியையும் விரும்பி சாப்பிட்டனர்.

ஹனிமூன்
தற்போது விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன் தாராவை கூட்டிக்கொண்டு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளாராம். அங்கு ஓட்டலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

அடுத்த வாரம் படப்பிடிப்பு
மேலும் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்டபடப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராம்ஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் அதில் நயன்தாரா கலந்துக்கொள்ள உள்ளார்.


Click it and Unblock the Notifications











