‘’இறுக்கி அணச்சு ஒரு உம்மா’’.. நயன் – விக்கி வீக் எண்ட் ஸ்பெஷல்..ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்!
சென்னை : புது ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வீக் எண்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
"ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்ற ஒற்றை பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நயன்தாரா. என்னதான் "ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று பாடினாலும், இவர் பிரபலமாவதற்கு ஒரு வருடம் தேவைப்படவில்லை.
ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா, கடந்த 6 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வந்தார். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.

கோலாகல திருமணம்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஐபிக்கள் கலந்து கொள்வதில் பிரச்சனை இருந்ததால் திருமணம் மகாபலிபுரத்தில் ரிசாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, தாய்லாந்தில் ஹனிமூனைக் கொண்டாடி இந்த ஜோடி அங்கிருந்து ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.

வீக் எண்ட் ஸ்பெஷல்
விக்னேஷ் சிவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவை கட்டி அணைத்துக்கொண்டு மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் என்ன வீக் எண்ட் கொண்டாட்டமா என்றும்... நடத்துங்க பாஸ்... நடத்துங்க என்றும் அந்த புகைப்படத்தை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.
Recommended Video

ஜவான் படப்பிடிப்பில்
திருமண கொண்டாட்டம் முடிந்ததை அடுத்து நயன்தாரா மீண்டும் பாஃர்முக்கு திரும்பி உள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பில் ஷாருக்கானுடனான காட்சிகளில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக் மற்றும் நயன்தாராவைத் தவிர சன்யா மல்ஹோத்ராவும் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தளபதி விஜய் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











