இது எந்த கோவில் விசிட்னு தெரியலையே.. வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆன்மிக செல்ஃபி!
சென்னை: சும்மா நயன்தாரா தனியா ஒரு போட்டோ போட்டவுடனே நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரேக்கப் என ஊரே ஒன்றுக்கூடி பேச ஆரம்பித்தது.
ஆனால், அதெல்லாம் இல்லைங்க, நாங்க ரொம்ப ஹேப்பியா இருக்கோம்னு இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை போட்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
Recommended Video
சபரி மலைக்கு ஜோதி தரிசனம் காண கிளம்பிய விக்னேஷ் சிவன், அதற்கு முன்னதாக நயன்தாராவுடன் எடுத்த ஆன்மிக செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
கட்டிக்கப் போற புருஷன்
ஜீ தமிழ் விருது விழாவில் நயன்தாராவிற்கு தனுஷ் விருதை அறிவிக்க மேடை ஏறிய நயன்தாரா கட்டிக்கப் போற புருஷன் என சின்ன கேப் விட்டு வெட்கப்பட்டு சொன்ன வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
அரக்கு நிற புடவை
ஜீ தமிழ் விருது விழாவுக்கு அரக்கு நிற புடவையில் அசத்தலாக வந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
எப்போ கல்யாணம்
கடந்த 4 ஆண்டுகளாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், விரைவில் இருவருக்கும் கல்யாணம் ஆகப் போகிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜீ தமிழில் நயன்தாரா சொன்ன அந்த வார்த்தையும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய திருமணமாக இவர்கள் திருமணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்போம்..

தர்பார்
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தர்பார் படத்தில் நயன்தாரா செம்ம கிளாமராகவும் க்யூட்டாகவும் நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வேற லெவலில் ரெடியாகி வருகிறதாம். நயன்தாராவின் நடிப்பையும் சின்சியாரிட்டியும் ஆர்.ஜே. பாலாஜி புகழ்ந்து தள்ளி வருகிறார். வரும் கோடை விடுமுறைக்கு நயன்தாரா - பாலாஜி கூட்டணியில் செம்ம ட்ரீட் காத்திருக்கு.
மகர ஜோதி தரிசனம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு சபரிமலைக்கு புறப்பட்டு விட்டார். பொங்கல் பண்டிகையன்று சபரிமலையில் தெரியும் மகர ஜோதி தரிசனத்தை காணப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாமியே சரணம்..
ஆன்மிக செல்ஃபி
அதேசமயம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நெற்றியில் குங்குமத்துடன் கோயிலில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











