நயன்தாரா - விக்கி திருமணம்.. ரிசாட்டிற்கு தீவிர பாதுகாப்பு.. போலீசாருக்கு வந்த புது குழப்பம்!

சென்னை : நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விழா மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஹோட்டல் ரிசார்ட்ல் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.

நாளை காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

நாளை நடைபெற உள்ள திருமணத்தில் எந்தெந்த முக்கிய பிரமுகர்கள் கலந்த கொள்ள உள்ளார்கள் என்பது தெரியாததால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நயன்தாரா - விக்கி

நயன்தாரா - விக்கி

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நாளை கோலாகலமாக நடந்து வருகிறது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடவுள் பக்தி அதிகம் என்பதால் முதலில் இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து, மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஹோட்டல் ரிசார்ட்டில் நடைபெறும் என்று அறிவித்தனர். இவர்களின் திருமணத்திற்காக மின்விளக்குகளால் ஓட்டல் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.

Recommended Video

பிரம்மாண்டமாக நடைபெற்ற Nayanthara – Vignesh Shivan திருமணம்! #Celebrity | Filmibeat Tamil
விவிஐபிக்கள்

விவிஐபிக்கள்

நயன்தார - விக்னேஷ் சிவன் திருமண விழாவில் நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர் என சுமார் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நெல்சன், விஜய்சேதுபதி,சமந்தா என 30 விவிஐபிக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் நெருக்கமாக நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு அழைப்பிதழ்

முதல்வருக்கு அழைப்பிதழ்

விக்கியும் நயன்தாராவும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். இதனால், இந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அதுமட்டும் இல்லாமல் முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இதில் யார் யார் கலந்து கொள்வார் என்று எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.

யார் யார் கலந்து கொள்வார்கள்

யார் யார் கலந்து கொள்வார்கள்

மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஹோட்டலை நயன்தாரா மூன்று நாளைக்கு மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அரசியல் மற்றும் சினிமாத்துறையில் முக்கியமான விவிஐபிக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் யார் யார் எல்லாம் திருமணத்தில் பங்கேற்க போகிறார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவரவில்லை.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

திருமணத்தில் கலந்து கொள்பவர்களின் விவரம் மகாபலிபுரம் போலீசாருக்கும் கிடைக்காததால், எப்படி பாதுகாப்பு வழங்குவது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். திருமணத்தில் பங்கேற்க வரும் பிரபலங்களை பார்க்க ஷெரட்டன் ஹோட்டலுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய வாய்ப்பு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால், நேற்றிலிருந்து அந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X