டிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்!

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் பரிசாக, திருமண அறிவிப்பை நயன்தாரா தந்திருக்கிறாராம்.

Recommended Video

Nayanthara Surprise Vignesh Shivan with Birthday party | காதலனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

சென்னை: விக்னேஷ் சிவனுக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக, திருமண அறிவிப்பை நயன்தாரா தந்தது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார். நானும் ரவுடி தான் படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் வெளிப்படையாகவே டேட்டிங் செய்து வருகின்றனர்.

நயன்தாராவை பொறுத்த வரை தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். திருமணம் அதற்கு தடையாக அமையக்கூடாது என அவர் நினைத்து வந்தார். எனவே திருமணத்தை அவர் தள்ளிப்போட்டு கொண்டே இருந்தார்.

அடம் பிடித்த நயன்

அடம் பிடித்த நயன்

ஆனால் விக்னேஷ் சிவன் வீட்டில் திருமணம் குறித்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அவர் நயன்தாராவிடம் எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் நயன்தாராவோ அதற்கு பிடிக்கொடுக்காமல் நழுவி வந்தார். அதோடு நூறு படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் என புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது நயன்தாரா மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

அந்தக் கொண்டாட்டத்தின் போது, பிறந்த நாள் பரிசாக நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொடுத்தது திருமணத்திற்கான சம்மதத்தை தான் எனக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா கூறியிருக்கிறாராம். இதைக் கேட்டு விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டாராம்.

வெளிநாட்டில் திருமணம்

வெளிநாட்டில் திருமணம்

இந்த திருமணம் மிக எளிமையான முறையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடக்கும் என தெரிகிறது. மேலும், திருமணம் நடைபெறும் இடம் குறித்தும் இதுவரை அவர்கள் முடிவு செய்யவில்லையாம். ஒருவேளை வெளிநாட்டில் இந்த திருமணம் நடக்கும் என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

ஆலோசனை

ஆலோசனை

திருமணம் எங்கு நடந்தால் என்ன? நயன்தாரா - விக்னேஷ் சிவன் கரம்பிடிக்கும் அந்த நாள் தான் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது ரசிகர்களுக்கும் பொன்னான நாள். பீக்கில் இருக்கும் போதே, திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது தான் புத்திசாலித்தனம் என்ற ஆலோசனையின் பெயரிலேயே நயன்தாரா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

தர்பார்

தர்பார்

நயன்தாரா தற்போது விஜய்யின் பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. மேலும் ரஜினியுடன் அவர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தவிர விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்னேஷ் சிவனை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இந்தப் பட வேலைகள் ஒருபுறம் நடந்தாலும், இருவரும் திருமண வேலைகளையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனராம். எப்போது வேண்டுமானாலும், நயனும், விக்கியும் தங்களது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X