நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இங்க தான் நடக்குதா...திருப்பதியில் இல்லையா?

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் நடக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. வேறு எங்கு திருமணம் நடக்கிறது என்ற சுவாரஸ்ய தகவலும் வெளியாகி உள்ளது.

Recommended Video

Nayanthara VigneshShivan Marriage ... திருப்பதியில் இல்லையா? | FilmibeatTamil #Celebrity

கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக டைரக்டர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் எப்போ எப்போ என ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போதே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகே அதை வெளிப்படையாக அறிவித்தனர்.

கசிய நிச்சயதார்த்தம்

கசிய நிச்சயதார்த்தம்

அதற்கு பிறகு வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது, விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்வது என இருந்தனர். பிறகு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாராவிடம் திருமணம் பற்றி கேட்ட போது, தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறினார். இதனால் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் இருவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தனர்.

ஜுன் 9 ல் நயன்தாரா திருமணம்

ஜுன் 9 ல் நயன்தாரா திருமணம்

இதற்கிடையில் இருவரும் தமிழகம் உள்ளிட்ட பல பிரபலமான கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வந்தனர். நானும் ரவுடி தான் படத்தின் போது இந்த கதையை தயார் செய்து விட்டதாகவும், இந்த கதையை படமாக எடுத்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் விக்னேஷ் சிவன் பேட்டியில் கூறினார். சொன்னது போலவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த பிறகு ஜுன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

குலதெய்வம் கோயிலில் வழிபாடு

குலதெய்வம் கோயிலில் வழிபாடு

இதைத் தொடர்ந்து இருவரும் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோயிலுக்கு சென்று இருவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த வீடியோ, போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டானது. இருவரும் திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும், திருமணம் முடிந்த பிறகு ஏகே 62 வேலைகளை விக்னேஷ் சிவன் துவக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

திருப்பதியில் நடக்கலியா

திருப்பதியில் நடக்கலியா

இந்த சமயத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டைட்டில் லுக் போன்ற டிசைனில் இந்த அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை என்றது தெளிவாகி உள்ளது. திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கியமான விஐபி.,க்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X