திருமணத்திற்கு தயாராகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்...கல்யாணம் எப்போ தெரியுமா ?
சென்னை : கோலிவுட்டில் மிக பிரபலமான காதல் தம்பதிகளாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி, தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் எப்போது நடைபெற உள்ளது என்ற விபரமும் கசிந்துள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததில் இருந்து, எப்போ கல்யாணம் என கேட்காத ஆளே இல்லை. ரசிகர்களும் தொடர்ந்து இதை கேட்டு வருகிறார்கள். ஆனால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர்.

சினிமாவால் மலர்ந்த காதல்
நானும் ரெளடி தான் படத்தில் நடிக்கும் போதே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு விழாக்கள், வெளிநாடு என இருவரும் ஜோடியாகவே வலம் வர துவங்கினர். இவர்கள் தங்கள் காதலின் நினைவாக ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, பல படங்களை தயாரித்து சர்வதேச விருதுகளை அள்ளி வருகிறார்கள்.

ரகசிய நிச்சயதார்த்தம்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் போட்டாலும் உடனே அது டிரெண்டிங் ஆகி விடும். அந்த அளவிற்கு அனைவரின் ஃபேவரைட் ஜோடி இவர்கள். கடந்த ஆண்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா, தான் கையில் அணிந்திருப்பது நிச்சயதார்த்த மோதிரம் என தெரிவித்தார். இதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது கன்ஃபார்ம் ஆகி விட்டது.

2022 ல் கண்டிப்பாக திருமணம்
சினிமாவை தாண்டி பல பிசினஸ்களிலும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் முதலீடு செய்து வருவதால், திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார். பிசினசை கவனித்துக் கொண்டு செட்டில் ஆக போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இவர்களின் கல்யாணம் எப்போது என்று மட்டும் சொல்லவே இல்லை. இந்நிலையில் சமீபத்தில் 2022 ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள நயன்தாராவும் விக்கியும் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசானதும் இருவரும் திருமணத்தில் கவனம் செலுத்த போகிறார்களாம்.

கல்யாணம் எப்போ தெரியுமா
லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் ஜுன் மாதம் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடக்க போகிறதாம். ஆனால் என்ன தேதியில், எந்த இடத்தில் இவர்களின் திருமணம் நடக்க போகிறது என்பது பற்றிய தகவல்களை பரம ரகசியமாக வைத்துள்ளார்களாம். சமீப காலமாக நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த ஆண்டிற்குள் திருமணத்தை முடிக்க முடிவு செய்து விட்டார்களாம். நயன்தாராவின் சொந்த ஊரான கேரள மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இவர்களின் திருமணம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஓ...இதுதான் பிளானா
நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாக முடித்து விட்டு, பிறகு வரவேற்பிற்கு அனைவரையும் அழைத்து திருமணத்தை அறிவிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதால், இந்த படம் துவங்குவதற்கு முன் திருமணத்தை முடித்து விடலாம் என்றும், படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று கூறப்படுவதால் திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஏகே 62 பட வேலைகளில் இறங்குவார்கள் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications