அய்யய்யோ! குடும்பத்துடன் மீட்டிங்! நஸ்ரியாவும் நயனும் கொள்ளை அழகா இருக்காங்களே!
திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவிலும் கேரள சினிமாவிலும் உள்ள க்யூட்டான கணவன் மனைவி லிஸ்ட்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும். நஸ்ரியா ஃபகத் ஃபாசில் ஜோடியும் இருக்கும். இரண்டு ஜோடிகளும் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றார்கள் என்ற தகவல் வெளியானபோது, சினிமா வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கின்றார் என்ற தகவலே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும், நானும் ரவுடிதான் படத்தின் கதையைச் சொல்லச் சென்றபோது, நயன்தாராவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம், எப்படியும் நாம் சொல்லும் கதையை அவர் வேண்டாம் எனக் கூறிவிடுவார் என்ற எண்ணத்தில் சென்றவர்தான் விக்னேஷ் சிவன். ஆனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் படத்தில் பணிபுரியும்போதே, இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

நஸ்ரியா: அதேபோல், தமிழ் சினிமாவிற்குள் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் மூலம், ஒரு சில படங்களிலேயே மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தினை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. இவர் தனது 19வது வயதில் நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஃபகத் ஃபாசிலுக்கு வயது, 32. இவர்கள் இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வித்தியாசம் இருந்ததால், இந்த விவகாரத்தை மைய்யப்படுத்தியே அதிக பேச்சுகள் கிசுகிசுக்கப்பட்டது.
க்யூட் ஜோடிகள்: ஆனால் இன்றைக்கு தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் க்யூட்டான சினிமா பிரபல ஜோடிகளில் இந்த இரண்டு ஜோடிகளும் உள்ளனர். இவர்கள் எதாவது புகைப்படம் வெளியிட்டாலே ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்து, லைக்குகளையும் வாழ்த்துகளையும் கமெண்ட்டுகளையும் தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ராஜா ராணி படம்: நயன்தாராவும் நஸ்ரியாவும் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. படம் ரசிகர்களுக்கு ஃபீல்குட் மூவி என்ற எண்ணத்தைக் கொடுத்ததால், படத்திற்கு இப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
மீட்டிங்கைப் போட்ட க்யூட் ஜோடிகள்: இந்நிலையில் விக்கி - நயன் தம்பதியரும், நஸ்ரியா - ஃபகத் ஃபாசில் தம்பதியரும் சந்தித்துள்ளனர். இது குறித்து நடிகை நஸ்ரியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு, பதிவிட்டுள்ளார். அதில், இறுதியாக சந்தித்துவிட்டோம். இந்த நாளுக்காக நாங்கள் எவ்வளவு நாட்களைக் கடந்து வரவேண்டியது இருந்தது" என கேப்ஷனிட்டு, நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் டேக் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளைக் தாரளமாக தட்டி விட்டு வருகின்றனர்.

மொத்தம் மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ள நஸ்ரியா, அதில் இரண்டு புகைப்படங்களில் நயனும் நஸ்ரியாவும் அன்பாக முத்தம் கொடுத்தபடியும், கட்டிப்பிடித்தபடியும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











