மனைவி நயன்தாராவுடன் படு ரொமான்ஸ் செய்யும் விக்கி.. பொறாமைப்படும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன்.

இவர் தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா: இவர் இயக்கிய நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, கடந்த ஆறு ஆண்டுக்கும் மேலாக இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அதன்பின் கடந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மகாபலிபுரத்தில் மிகப்பெரிய ரெஸ்டாரண்டில் பல பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது.

Nayanthara vignesh shivan new romantic photos trending on social media

இரட்டைக் குழந்தை: திருமணமான நான்கு மாதத்திலேயே வாடகைத் தாய் முறையில் இரட்டைகுழந்தைக்கு தாய் ஆனார். இருவருக்கும் உயிர் மற்றும் உலக் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளின் முகத்தை மீடியாவில் காட்டாமல் இருந்த நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். இத்தனை நாட்களாக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நயன்தாரா, சோஷியல் மீடியாவில் தற்போது ஆக்டிவாக உள்ளார்.

காதலுக்கான முகம்: இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு காதலுக்கு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்ஸ் பலர் கண்ணுபடப்போகுது சுத்திப்போடுங்க என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

விலை உயர்ந்த பரிசு: நடிகை நயன்தாரா கடந்த மாதம் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிய போது விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவிக்கு 3கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேட்ச் காரை பரிசாகத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னபூரணி: நடிகை நயன்தாரா நடிப்பில் அண்மையில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இப்படத்தில் செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையை அடையும் பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X