அழகுத் தீவு நயனுடன் கிரேக்க தீவில் விக்னேஷ் சிவன்: வாழ்வு தான் அன்பான இயக்குநரே
Recommended Video
சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓய்வு எடுக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.
பெரும்பாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு தான் செல்வார்கள். இந்நிலையில் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரீஸுக்கு சென்றுள்ளனர்.
விக்னேஷ் சிவன்
கிரேக்க தீவான சான்டோரினிக்கு அழகுத் தீவான நயன்தாராவுடன் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். ஊர் சுற்ற சென்ற இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனது தங்கத்தை அழகழகாக புகைப்படம் எடுத்து போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். நான் சொல்லலப்பா, அவர் தான் நயன்தாராவை தன் தங்கம் என்கிறார்.
சிங்கிள்ஸ்
விக்னேஷ் சிவன் எப்பொழுது நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் அதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பாகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், வாழ்வு தான் விக்கி சார், அதுக்கெல்லாம் ஒரு ராசி வேண்டும் போல என்று ரொம்ப ஃபீலிங்கில் தெரிவித்துள்ளனர். 90ஸ் கிட்ஸிடம் தொடர்ந்து சாபம் வாங்கிக் கொண்டிருக்கிறார் விக்கி.
காதல்
அன்பான இயக்குநரே, தலைவியை அழைத்துக் கொண்டு இப்படி நாடு, நாடாக சுற்றுவது எல்லாம் சரி. சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டு தம்பதியாக செல்லுங்கள். அதை பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாராவின் இந்த காதல் கைகூட வேண்டும் என்பதில் அவரை விட ரசிகர்கள் தான் பேராவலாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்
நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த மிஸ்டர் லோக்கல் படம் அண்மையில் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முழுப் படத்தை பார்ப்பதற்கு தனி பொறுமை வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இயக்குநர் ராஜேஷ் படமா இது, காமெடி கடுப்பேற்றுகிறதே என்று ரசிகர்கள் நொந்து கொண்டனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











