நயன்தாரா கையை பிடித்தபடி செம ரொமான்ஸ் லுக்கில் விக்னேஷ் சிவன்.. இது வேறே லெவலால்ல இருக்கு!
சென்னை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளியிட்டுள்ள ரொமான்ஸ் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.
'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சொந்த வாழ்க்கை
இந்நிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார். இதற்கிடையே ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் இருவரும் சென்றனர்.

ஹாலிவுட் நடிகை
காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில், நயன்தாரா ஹாலிவுட் நடிகை சாயலில் இறங்கி வந்த புகைப்படங்கள் வைரலாயின. இதையடுத்து இருவரும் வெக்கேஷனுக்காக கோவா சென்று திரும்பினர்.

விஜய் சேதுபதி, சமந்தா
இப்போது விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றார். அங்கு விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கும் காட்சிகளை ஷுட் செய்தார். இதற்கிடையே, நடிகை நயன்தாரா, அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றார்.

படப்பிடிப்பு ரத்து
சில நாட்களுக்கு முன் அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தனது ஷூட்டிங்கையும் விக்னேஷ் சிவன் முடித்திருந்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாக ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்த புகைப்படங்கள் வைரலாயின.

ஸ்டைல் போட்டோ
இப்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், காதலும் ஒளியும் எங்கும் பரவட்டும், இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். கூடவே செம ஸ்டைல் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கைகளைப் பிடித்தபடி
அந்த போட்டோவில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகளைப் பிடித்தபடி செம ரொமான்டிக்காக உள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. சில நெட்டிசன்ஸ், எங்க தலைவியை நல்லா பார்த்துக்கோங்க விக்னேஷ் சிவன் என கூறியுள்ளனர். பலர் அவர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











