அடுத்தக்கட்டத்துக்கு நகரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல்... விரைவில் டும்டும்டும்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஒரே நடிகை நயன்தாராதான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து வருகிறார் அவர். அதேவேளையில், அஜித், ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று, ஒன்றாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

பண்டிகை கொண்டாட்டம்
எந்த ஒரு பண்டிகையானாலும் இருவரும் ஒன்றாகவே கொண்டாடுகிறார்கள். அதன் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். ஆனால் இதுவரை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதில்லை.

குடும்பத்துடன் புகைப்படம்
இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இதுதான் அவர்கள் தான் அடுத்தக்கட்டதுக்கு, அதாவது திருமணத்தை நோக்கி நகர்கிறது என்ற பேச்சை ஆரம்பித்து வைத்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்து
அந்த பதிவில் அவர், "இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய விஷு வாழ்த்துகள்" என வாழ்த்து கூறி, இப்படிக்கு விக்கிநயன் குடும்பம் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், நல்ல குடும்பம், வாழ்த்துகள் நயன் என வாழ்த்தியுள்ளனர்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, ரசிர்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











