Nayanthara -Vignesh Shivan: காதலர் தின வாழ்த்தை காதலோடு தட்டி விட்ட விக்னேஷ் சிவன்.. அடடே கவிதை!
சென்னை: பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் மாறி மாறி காதலர் தின வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இப்படி இருக்கையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் மகன்கள் உயிர், உலக் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், " உங்கள் கைகளை விரித்துப் பாருங்கள்... அதில் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றலாம். ஆனால், உங்கள் இதயத்தைத் திறந்து பாருங்கள், அங்கே ஒரு உண்மையான அன்பு நிறைந்திருக்கும்.

இதுதான் சொத்து: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் காதலால் நிரப்பும் ஒரு நபர் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், அதைவிடப் பெரிய செல்வம் வேறொன்றும் இல்லை. நீங்கள் மன்னர்களை விடவும் பெரும் பணக்காரர், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர், வாழ்வின் உன்னதமான பரிசைப் பெற்றவர், இந்த பிரபஞ்சத்தின் பேரன்பால் முத்தமிட பட்டவர், அன்பை எதைக் காட்டிலும் மேலாக கருதும் அனைத்து நல் இதயங்களுக்கும் எமது இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த கவித்துவமான காதலர் தின வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
நயன்: அதேபோல் நயன்தாராவும் தனது காதலர் தின வாழ்த்தில், “சில உறவுகள் நாம் சந்திக்கும் முன்பே விதியால் எழுதப்பட்டவை. அப்படி என் வாழ்வின் விதியாக வந்தவன் நீ! என் அம்மாவின் பிரார்த்தனைகள் பலித்து, கடவுள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம் நீயே.
பலமே நீதான்: பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன... ஆனாலும் நீ ஒரு நாள் பிரிந்தாலும் என் மனம் உன்னையே தேடுகிறது. என் அமைதி நீ, என் பலம் நீ, மனித உருவில் எனக்குக் கிடைத்த சொர்க்கம் நீ! அன்பு, பொறுமை, நம்பிக்கை என அனைத்தையும் உன்னிடமிருந்தே கற்றுக்கொண்டேன். உலகம் பாரமாகத் தோன்றும் போதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்ளும் உனக்கு நன்றி. உன்னை நேசிப்பது மட்டும் என் கடமையல்ல, உனக்காகப் பிரார்த்திப்பதும், ஒவ்வொரு நொடியும் உன்னைத் தேர்ந்தெடுப்பதும் தான் என் வாழ்வின் மகிழ்ச்சி. வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் கைகோர்த்து நடப்போம்... இன்னும் அதிக அன்புடன்! இனிய காதலர் தின வாழ்த்துகள், பார்ட்னர்!" என கவிதையாக எழுதி உள்ளார். இவர்களின் கவிதை வழி காதலர் தின வாழ்த்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











