கோயில் கோயிலாக செல்லும் நயன்–விக்கி ஜோடி...இப்போ எங்கே போயிருக்காங்க?
சென்னை : கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து கோயில்களுக்கு சென்று சாமி தரினசம் செய்து வருகிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. தற்போது அவர்கள் கோயிலுக்கு சென்று வந்த போட்டோக்கள் இணையத்தில் செம டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் நயன்தாரா, தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கான்-அட்லீ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.

ஃபேமசான ஸ்டார் காதல் ஜோடி
டைரக்டர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து நானும் ரெளடி தான் படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் ஆக்கினார். இந்த படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு ஓப்பனாகவே இருவரும் பல இடங்களுக்கும் ஜோடியாக சென்று வர துவங்கினர். கோலிவுட்டின் ஃபேமசான ஸ்டார் காதல் ஜோடி என்றால் இவர்கள் தான்.

நிச்சயதார்த்தம் முடிந்தது
பிறந்தநாள், புத்தாண்டு, காதலர் தினம் என அனைத்து விஷேங்களையும் வெளிநாடுகளுக்கு சென்று ஒன்றாக கொண்டாடி வந்த இந்த ஜோடி, ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினர். இதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பல படங்களை தயாரித்து, பல விருதுகளையும் பெற்று வருகின்றனர். வாழ்க்கையில் மட்டுமல்ல தொழிலிலும் ஒன்றாக இருக்கும் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என பல காலமாக கேள்வி விடாமல் கேட்கப்பட்டு வருகிறது.

கோயில் கோயிலாக செல்லும் ஜோடி
இந்நிலையில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி ஷாக் கொடுத்தார். இதற்கு பிறகு கேரளாவில் பகவதி அம்மன் கோயில், சென்னையில் காளிகாம்பாள் கோயில் என அடுத்தடுத்து பல புகழ்பெற்ற கோயில்களுக்கும் அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இப்போ எங்கே போயிருக்காங்க
இந்த நிலையில் லேட்டஸ்டாக இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கையில் மாலையுடன் சாமி தரிசனம் செய்து விட்டு கோயிலில் இருந்து வெளியே வந்து, ஜோடியாக காரில் ஏறி சென்ற போட்டோக்கள் இணையத்தில் கசிந்து செம டிரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











