கோலாகலமாக நடந்த நயன்தாரா திருமணம்.. கல்யாணத்துக்கு வராத அஜித்.. காரணம் இதுதானாம்!

சென்னை : நயன்தாரா விக்னேஷ் திருமணத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.

திருமண நிகழ்வுக்கு விக்னேஷ் சிவன் பெற்றோர்கள் மற்றும் நயனின் பெற்றோர்கள் அனைவரும் ஒரு வாரம் முன்பே ஓட்டலுக்கு வந்துவிட்டனர். ஓட்டலின் அத்தனை அறைகளையும் திருமணத்திற்காக ஒருவாரம் முன்பே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

திருமணத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் முக்கியமான நபர்களை மட்டுமே வைத்து இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இன்று காலை சரியாக 8.30 மணிக்கு 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் சரியாக 10.25 மணிக்கு தாலியை கட்டினார்.

முன்னணி பிரபலங்கள்

முன்னணி பிரபலங்கள்

நிகழ்ச்சியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக எந்த திருமணத்திற்கு வந்தாலும் , மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றுவிடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார்.

கலந்து கொள்ளவில்லை

கலந்து கொள்ளவில்லை

இந்த நிலையில், அஜித் திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், திருமண விழாவில் அஜித் பங்கேற்கவில்லை. ஆனால், அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் ஷாலினியின் சகோதரி ஷாமிலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.நயன்தாராவின் திருமணத்தில் அஜித் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஓட்டலுக்கு வெளியில் காத்து இருந்தனர்.

Recommended Video

Nayanthara Wedding | மணமக்களை வாழ்த்திய Celebrities and Families *Celebrity | Filmibeat Tamil
ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

அஜித் நடிக்கும் ஏகே62 படத்தை விக்னேஷ் இயக்குவதால், இந்த திருமணத்தில் நிச்சயம் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை. அஜித் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் தற்போது போனிகபூர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X