நயன்தாரா – விக்கி திருமணம்.. பலாப்பழ பிரியாணி.. 27 வகையான உணவுடன் தடபுடலான விருந்து!

சென்னை : நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விருந்தில் 27 வகையான சுத்த சைவ உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன.

பலாப் பழம் பிரியாணி, பன்னிர் பட்டானிக்கறி, பருப்புக் கறி என புலால் இல்லாத சுத்த சைவ உணவு திருமண விருந்தில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

Nayanthara Wedding | Red Saree-யில் ஜொலிக்கும் Nayanthara *Celebrity | Filmibeat Tamil

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அதிக கடவுள் பக்தி கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இன்று வியாழக்கிழமை சாய் பாபாவுக்கு உகந்தநாள் என்பதால் சுத்த சைவ உணவு திருமண விருந்தாக பரிமாறப்பட்டுள்ளது.

நயன்தாரா,விக்கி திருமணம்

நயன்தாரா,விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமணத்துக்காக 3 நாட்களுக்கு அந்த ஓட்டல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பார்க்கும் இடம் எல்லாம் பிரமாண்டமாக விசேஷ கண்ணாடியாலும், ரம்மியமான மலர்களாலும் அரங்கு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

மெஹந்தி விழா

மெஹந்தி விழா

மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

இன்று காலை சரியாக 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாரவிற்கு விக்னேஷ் சிவன் தாலிகட்டினார். அவர்களுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்றும், மேலும், திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு செக்யூரிட்டி கோட் கொடுக்கப்பட்டுள்ளதாம், அந்த கோடை காண்பித்தால் மட்டுமே திருமண அரங்கத்திற்குள் நுழைய முடியும் போன்ற ஏகப்பட்ட கன்டிஷனுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தடபுடலாக நடந்து வருகிறது.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விருந்து

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விருந்து

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விருந்தில் 27 வகையான சுத்த சைவ உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. இதன் முழு லிஸ்ட் இதோ.

பலாப்பழ பிரியாணி

பன்னிர் பட்டானிக்கறி

பருப்புக் கறி

அவியல்

மோர் குழம்பு

மிக்கன் செட்டிநாடு கறி

உருளை கார மசாலா

வாழைக்காய் வருவல்

சென்னா கிழங்கு வருவல்

சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு

காளான் மிளகு வறுவல்

கேரட் பொரியல்

பீன்ஸ் பொரியல்

காய் பொரிச்சது

பொன்னி ரைஸ்

சாம்பார் சாதம்

தயிர் சாதம்

பூண்டு மிளகு ரசம்

தயிர்

வெஜிடபுள் ரைதா

வடகம்

வத்தல்

அப்பளம்

ஏலக்காய் பால்

பாதாம் அல்வா

இளநீர் பாயாசம்

கேரட் ஐஸ் கிரீம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X