நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வருகை

சென்னை : நடிகை நயன்தாரா - டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள Sheratorf Grand resort ல் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. காலை 8.30 மணி துவங்கி 9.30 மணி வரை முகூர்த்தம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், காலை 10.30 மணி வரை இந்த திருமண நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் விவிஐபிக்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது.

முதல்வர் கலந்து கொள்வாரா

முதல்வர் கலந்து கொள்வாரா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். ஆனால் முதல்வர் இவர்களின் திருமண விழாவிற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. முதல்வர் சார்பில் அவரது மகனும், நடிகரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

15 புரோகிதர்கள் வருகை

15 புரோகிதர்கள் வருகை

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக பல்வேறு கோயில்களில் இருந்து 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் திருமணம் நடைபெறும் ரிசார்ட்டிற்கு வந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வந்துள்ளனர்.

80 பவுன்சர்கள் பாதுகாப்பு

80 பவுன்சர்கள் பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு, பல கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடைபெறும் கண்ணாடி மண்டபத்தை சுற்றி 80 க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மீடியாக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், திருமண போட்டோக்களை பிற்பகலுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் தாங்களே வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி உள்ளார்.

திருமணம் முடிந்ததும் ஷுட்டிங்

திருமணம் முடிந்ததும் ஷுட்டிங்

திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதால் விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ்- ல் ஒளிபரப்பப்பட உள்ளது. திருமணம் முடிந்ததும் கெளதம் மேனன் இயக்கும் நயன்தாராவின் ஆவணப் படத்தின் ஷுட்டும் இதே அரங்கில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X