அஜித்தை மட்டும் பார்க்கவிடுங்க...நயன்தாரா திருமணத்தில் அடம்பிடித்த நரிக்குறவ சிறுவன் !

சென்னை : நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கோலாகலமாக நடந்து வருகிறது.

Recommended Video

Nayanthara Wedding | அடம்பிடித்த நரிக்குறவ சிறுவன் ! *Celebrity | Filmibeat Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களை காண ஏராளமான பொதுமக்கள் இந்த ஓட்டலில் நுழைவாயில் கூடி நின்றனர். இதில், நரிக்குற மக்கள் சிலர் ஓட்டலின் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது ஒரு சிறுவன், அஜித்தை மட்டும் பார்க்கவிடுங்க என அங்கிருந்த காவலர்களிடம் கெஞ்சினான்.

கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

நடிகர் நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணம் இன்று காலை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு திருமண சடங்குகள் அனைத்தும் தொடங்கி சரியாக 10.25 மணி அளவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலிக்கட்டினார்.

20 புரோகிதர்கள்

20 புரோகிதர்கள்

இந்த திருமணம் ஆஹம முறைப்படி நடைபெற்றதாகவும், இதில் 20 புரோகிதர்கள் மந்திரம் முழுங்க திருமணம் நடைபெற்றதாகவும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் அனைத்து பொருத்தமும் சிறப்பாக இருப்பதாகவும் இருவரும் ஆனந்தமாக வாழ்வார்கள் என்று புரோகிதர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் திருமணத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட பவுசர் நிறுத்தப்பட்டுள்ளனர். திருமண அழைப்பிதழுடன் கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கோடை கண்பித்தால் தான் ஓட்டலுக்குள் நுழையும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜித்தை மட்டும் பார்க்கவிடுங்க

திருமணத்திற்கு வரும் திரைப்பிரபலங்களை காண ஓட்டலுக்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு நிற்கின்றனர். இதில் நரிக்குறவர் மக்கள் ஓட்டல் வாசலுக்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்ப முற்பட்டனர். ஆனால், நரிக்குறவ சிறுவர் ஒருவன் நயன்தாராவை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை நடிகர் அஜீத்தை பார்க்க விடுக்க என்று அங்கிருந்த காவல்களிடம் கெஞ்சினான். நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு காலை முதல் பிரபல நடிகர்கள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருவதால் அந்த பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X