நயன்-விக்கி திருமணம்..இத்தனை எக்ஸ்பர்ட்டுகள் நடத்தி வைத்தார்களா?..

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Recommended Video

Nayanthara Wedding | Red Saree-யில் ஜொலிக்கும் Nayanthara *Celebrity | Filmibeat Tamil

திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசாட்டில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புகைப்படங்கள் வெளியாகிவிடக்கூடாது என கடுமையான கட்டுப்பாடு இருந்த போதும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தின.

தற்போது திருமண ஏற்பாடுகளை செய்தவர்களின் பெயரை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம்

நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம்

காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி நேற்று திருமண பந்தத்தில் இணைந்தனர். நேற்று காலை 20 புரோகிதர்கள் வேதமந்திரங்களை ஓத காலை 10.25 மணிக்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலியை கட்டினார். தாலி கட்டும் புகைப்படத்தை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

200 பேருக்கு அழைப்பு

200 பேருக்கு அழைப்பு

திருமணத்திற்கு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் 30 பேர் மட்டுமே திரைப்பிரபலங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், விஜய், விஜய்சேதுபதி என ஏராளமான நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். அஜித் திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மும்பைக்குழு

மும்பைக்குழு

திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருந்தனர். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரம் செய்த காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்திருந்தனர்.

தேவதைப்போல நயன்தாரா

தேவதைப்போல நயன்தாரா

நடிகை நயன்தாரா சிகப்பு நிறத்தில் ரோஜா பூ டிசைனர் புடவை அணிந்து தேவதைப்போல காணப்பட்டார். திருமணம் தமிழ் முறைப்படி நடந்தாலும் நயன்தாராவின் உடை வட இந்தியன் பாணியில் இருந்தது. விக்னேஷ் சிவனின் திருமண உடை பாரம்பரியத் தன்மை கொண்டதாக இருந்தது. இதில் வேஷ்டி மற்றும் குர்தா மற்றும் சால்வை அணிந்து வந்தார். இவை அனைத்தும் ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவையாகும்.

இத்தனை எக்ஸ்பர்ட்டுகளா?

இத்தனை எக்ஸ்பர்ட்டுகளா?

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருமண ஏற்பாட்டாளர்கள் மற்றும் உடைஅலங்காரம், சிகை அலங்காரம், மேடை அலங்காரம் செய்த எக்ஸ்பர்ட்டுகளின் பெயரை வெளியிட்டுள்ளார். அதில் போட்டோகிராபர் ஜோசப் ராதிக், படத்தொகுப்பு ட்வெடிங் ஃபிலிமர், மேக்கப் பங்ககே_புனீத், ஹேர் ஸ்டைலிஸ்ட் அமித்தாகூர், டிசைனர் ஜெடேபி மோனிசந்த் கிருஷ்மா, அலங்காரம், ஷலீனநாதனி மற்றும் திருமண ஏற்பாட்டாளர் ஷாதி ஸ்குவாட் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X