நயன்தாரா காலை பிடித்த விக்னேஷ் சிவன்...இந்த போட்டோவ யாருமே வெளியிடலியே

சென்னை : நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு வாரம் ஆகி விட்டாலும் தற்போது வரை அவர்களை பற்றி வெளி வரும் ஒவ்வொரு தகவலும், போட்டோவும் செம டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Nayan-Wikki Kerala-வில் சாமி தரிசனம் | Chettikularanga Temple *Celebrity | Filmibeat Tamil

திருமணத்திற்கு முன்பும் சரி, திருமண அறிவிப்பை வெளியிட்ட பிறகும் சரி, திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவின் திருமணம் தான் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, ஷாருக்கான், விஜய், சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு, பயங்கர கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடைபெற்றது.

25 கோடி செலவழித்த நெட்ஃபிளிக்ஸ்

25 கோடி செலவழித்த நெட்ஃபிளிக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இதனால் மற்றவர்கள் யாரும் போட்டோ, வீடியோக்கள் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர்களின் திருமணம் தொடர்பான ஒரு வீடியோ க்ளிப்பிங் கூட இதுவரை வெளியாகவில்லை.

திருமண செலவு 20 கோடி

திருமண செலவு 20 கோடி

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு மொத்தமாக 20 கோடி வரை செலவானதாகவும், திருமண செலவுகள் மொத்தத்தையும் நெட்ஃபிளிக்கஸ் தான் வழங்கியதாகவும் கூறப்பட்டது. 25 கோடிக்கு டிஜிட்டல் உரிமத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ், 20 கோடி திருமண செலவுகளை செய்ததுடன் மீதமுள்ள 5 கோடியை நயன் - விக்கியிடம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் நயன் - விக்கியின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் எப்போது வெளியிட போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

விக்கி வெளியிட்ட திருமண போட்டோ

விக்கி வெளியிட்ட திருமண போட்டோ

ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் அறிவித்ததை போல் விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்ததும் பிற்பகலில் தங்களின் திருமண போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டார். தாலி கட்டிய பிறகு நயன்தாரா நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தமிட்டது, கையில் தாலியை பிடித்தபடி நயன்தாரா எமோஷனலானது, விக்னேஷ் சிவன் நடந்து வருவது, நயன்தாரா நடந்து வருவது, விக்னேஷ் சிவன் - நயன்தாரா மாலை மாற்றிக் கொண்டது, தாலி கட்டியது என மொத்தமாக 10 போட்டோக்கள் மட்டுமே வெளியிடப்பட்டது.

இந்த போட்டோவ யாருமே வெளியிடலியே

இந்த போட்டோவ யாருமே வெளியிடலியே

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் முழுக்க முழுக்க இந்து முறைப்படி தான் நடைபெற்றது. இதில் நயன்தாராவின் காலை பிடித்து விக்னேஷ் சிவன் மெட்டி அணிவித்த ஸ்டில் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா நின்று கொண்டிருக்க, விக்னேஷ் சிவன் கீழே அமர்ந்து அவரது காலை பிடித்தபடி இருக்கும் இந்த ஸ்டில்லை இதுவரை விக்கி - நயன் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை.

ரீல் கூட ரெடி பண்ணிட்டாங்களேப்பா

ரீல் கூட ரெடி பண்ணிட்டாங்களேப்பா

அப்படி இருக்கையில், அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி யார் இந்த போட்டோவை எடுத்தார்கள். எப்படி வெளியில் கசிந்தது என தெரியவில்லை. ஆனால் இந்த போட்டோவை வைத்து, விண்ணை தாண்டி வருவாய் பட பாடலை இணைத்து ரீல் உருவாக்கி சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள். இந்த ஸ்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

டிரெண்டிங்கில் கலக்கும் நயன் - விக்கி

டிரெண்டிங்கில் கலக்கும் நயன் - விக்கி

திருமணம் முடிந்ததும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, கொச்சியில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். அங்கு அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபட்டது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது, ஜாலியாக செம சிம்பிளாக ஊர் சுற்றியது போன்ற பல போட்டோக்கள் வெளியாகி டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கையில் இந்த போட்டோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X