உயிர் - உலக்குக்கு இரண்டு வயசாச்சு.. உருகி உருகி வாழ்த்து சொல்லும் நயன் - விக்கி.. செம க்யூட்!

சென்னை: தமிழ் சினிமா குறித்து ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கு நிச்சயம் நடிகை நயன்தாரா குறித்து தெரிந்திருக்கும். ஐயா படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நயன் சினிமா வாழ்க்கையிலும் தனது சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். இந்நிலையில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.

nayanthara vignesh shivan nayanthara children birthday

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற்ற நான்கு மாதங்களில் அதாவது அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுதியது. இப்படியான நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக அடுத்து தகவல்கள் வெளியானது. இதற்கு கொஞ்சம் சலசலப்பு ஏற்பட, அதனை விக்கி மற்றும் நயன் தம்பதியர் எதிர் கொண்டனர்.

nayanthara vignesh shivan nayanthara children birthday

குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். குழந்தைகளின் புகைப்படங்களைக் காணவே இவர்களது இன்ஸ்டா பக்கத்தை அடிக்கடி ரசிகர்கள் செக் செய்து வருவார்கள். இப்படியான நிலையில், தற்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தங்களது குழந்தைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

nayanthara vignesh shivan nayanthara children birthday

நயன் போஸ்ட்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அழகன்ஸ். உங்களுடன் நான் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும், அது சிறு வினாடியாக இருந்தாலும் அந்த சிறு வினாடியில் நான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தது போல் உணர்கிறேன். எங்களின் வாழ்க்கையின் மாயாஜால பலமே நீங்கள்தான். எங்களுக்கு இப்படியான வாழ்க்கையைக் கொடுத்ததற்கு நன்றி. என் அன்பான உயிர் மற்றும் உலக் ஆனா உங்கள் இருவரையும் நான் முழு மனதுடன் நேசிக்கிறேன். கடவுள் உங்களை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நன்மைகளையும் ஆசீர்வதிப்பாராக. அம்மா & அப்பா ஆகிய நாங்கள் உங்களை எப்போதும் நேசிப்போம்.

nayanthara vignesh shivan nayanthara children birthday

விக்கி போஸ்ட்: நான் உங்களுக்கு உயிர் & உலகம் என்று பெயரிட்டபோது. நீங்கள் இருவரும் என் உயிர் & உலகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்! நீங்கள் என்னிடம் உயிராகவும் உலகமாகவும் இருக்கின்றீர்கள். என் செல்லக் குழந்தைகளான உங்கள் இருவரையும் நேசிக்கிறேன். ஐ லய் யூ டூ. அம்மாவும் அப்பாவும் நமது முழுக் குடும்பமும் வாழ்நாளில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கடவுள் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும், நம்மை ஆசீர்வதிக்கும்போது தாராள மனப்பான்மையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்கிறது.

nayanthara vignesh shivan nayanthara children birthday

நீங்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என கடவுளிடம் நான் கடுமையாக பிராத்தனை செய்கின்றேன். கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களுடனும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அன்புடனும் நீங்கள் என்றைக்கும் இருக்கவேண்டும். உங்கள் இருவருக்கும் எனது வாழ்க்கையான உயிர் மற்றும் உலக்-குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! லவ் யூ டூ மச்" என பதிவிட்டுள்ளார். இவர்களின் பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் குழந்தைகளுக்கு பிற்ந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X