Nayanthara: நயன்தாரா வீட்டில் அடிக்கடி விஷேசம்தான் போல.. குழந்தைகளுடன் இப்ப என்ன பண்றாங்கனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான ஜோடி என்றும் மிகவும் பொருத்தமான ஜோடி என்றும் சொல்லப்படும் தம்பதியர் என்றால் அது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரைச் சொல்லலாம். இவர்களின் காதல் கதை, திருமண கதை அதன் பின்னர் குழந்தைகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். இவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தங்களது புகைப்படங்களை, தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்தால், உடனே லைக்குகளை தட்டி விடும் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் அவர்களை பின் தொடருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி ஏதாவது விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன் தினம் குழந்தைகளுடன் குழந்தைகள் தினவிழாவைக் கொண்டாடியுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற்ற நான்கு மாதங்களில் அதாவது அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக அடுத்து தகவல்கள் வெளியானது. இதற்குள் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட, அதனை விக்கி மற்றும் நயன் தம்பதியர் எதிர் கொண்டனர். இவர்கள் திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

nayanthara vignesh shivan nayanthara children

குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். குழந்தைகளின் புகைப்படங்களைக் காணவே இவர்களது இன்ஸ்டா பக்கத்தை அடிக்கடி ரசிகர்கள் செக் செய்து வருவார்கள். இப்படியான நிலையில், தற்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தங்களது குழந்தைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

nayanthara vignesh shivan nayanthara children

உயிர் - உலக்: நயன் மற்றும் விக்கி தம்பதியர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னர் இவர்களது மொத்த வாழ்க்கையுமே மாறிவிட்டது எனலாம். குறிப்பாக இவர்களது குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்வது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, குழந்தைகளைக் அழைத்துக் கொண்டு வெளிநாடுகளில் ஜாலியா சுற்றுவது என இவர்களின் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது.

nayanthara vignesh shivan nayanthara children

நயன் - விக்கி: குறிப்பாக நயன் சினிமாக்களில் அளவாக மட்டுமே கமிட் ஆகி, தனது குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். விக்னேஷ் சிவனும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் குழந்தைகள் மற்றும் தனது மனைவி நயன் உடன் அதிக நேரம் செலவழித்து வருகின்றார். மேலும் தனது குழந்தைகள் குறித்தும், தனது குழந்தைகள் வந்த பின்னர் தனது வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் சினிமா பாடல்களில் எழுதிவருவது, பலரது மனதையும் கவர்ந்துள்ளது.

nayanthara vignesh shivan nayanthara children

குழந்தைகள் தினம்: இந்நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளின் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தினையும் வெகுச் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், பெற்றோர்களை மகிழ்விக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் உயிர் மற்றும் உலக் வேட்டி சட்டையில் இருப்பதால் ரசிகர்கள் அன்பை வாரி வழங்கி வருகின்றனர்.

nayanthara vignesh shivan nayanthara children

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X