தினமும் காதலர் தினம் தானாம்.. இது விக்னேஷ் – நயனின் குட்டி ஸ்டோரி.. டிசைன் டிசைனா வருது போட்டோஸ்!

சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்தை வேற லெவலில் கொண்டாடி உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.

5 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி, இன்னமும் தங்களது திருமணத்தை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், காதலர் தினமான நேற்று டின்னர், ஷாப்பிங் செய்த புகைப்படங்களை பதிவிட்டு, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

காதலர் தினமான நேற்று விக்னேஷ் சிவனின் அடுத்த படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியா அடுத்த படம்

ஒருவழியா அடுத்த படம்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தோல்வியை தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் சிவன், எந்தவொரு புது படத்திலும் கமிட் ஆகாமல், இருந்தார். இந்நிலையில், காதலர் தினமான நேற்று விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பை விக்னேஷ் வெளியிட்டார்.

காதலர் தின கொண்டாட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் வேறு வேறு ஸ்பாட்களில் காதலுடன் எடுத்த மூன்று புகைப்படங்களை பதிவிட்டு தனது காதலர் தின கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

என்ன ஃபீலிங்கா

என்ன ஃபீலிங்கா

அதுமட்டுமின்றி அந்த புகைப்படங்களுடன் கேப்ஷனாக கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறோம். இது எங்க க்யூட்டி ஸ்டோரி என பலமாக பில்டப்பும் கொடுத்துள்ளார். காத்துவாக்குல 5 வருஷம் ஓடிபோனது குறித்து சைக்கிள் கேப்புல விக்னேஷ் சிவன், நயனுக்கு நினைவு படுத்துகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து போட்டுக் கொடுத்து வருகின்றனர்.

இன்னும் இத்தனை வருஷமா?

இன்னும் இத்தனை வருஷமா?

ஏற்கனவே 5 வருஷம் ஆகிடுச்சு, எப்போ கல்யாணம் என தெரியாமல், ஓவர் ஃபீலிங்கில் விக்னேஷ் சிவன், இப்படியொரு கேப்ஷனை போட்டுள்ளார். அந்த போஸ்ட்டுக்கு கீழே ஒரு நெட்டிசன், 5 வருஷம் இல்லை இன்னும் 500000000 என இஷ்டத்துக்கு சைபர்களை அடுக்கிக் கொண்டே போகிறார். பாவம் விக்னேஷ் சிவன்.

மீண்டும் நயனுடன்

மீண்டும் நயனுடன்

விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே அவருக்கு ஹிட் கொடுத்த படம் என்றால் அது நானும் ரவுடிதான் படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து மறுபடியும் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்ற உள்ளார். கூடுதல் இணைப்பாக சமந்தாவும் இந்த படத்தில் நடித்து அசத்த உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X