ஹாங்காங் சுற்றுலாவில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் செயலால் கடுப்பான ரசிகர்கள் - எதுக்குனு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதன் நயன்தாரா தான். இவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தினமும் தங்களது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தான் கால் வைத்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்து வருகிறார். அண்மையில் இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்த அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் ஹிந்தியில் சக்கை போடு போட்டது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது.

ஹாங்காங் சுற்றுப்பயணம்: நயன்தாரா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சுமாராக வசூல் செய்தது. இந்நிலையில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டைக் குழந்தைகள் ஆன உயிர் மற்றும் உலக் உடன் ஹாங்காங்கில் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். ஹாங்காங் சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக ஹாங்காங்கில் உள்ள நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்காவில் நயன்தாரா தனது மகன்களான உயிர் மற்றும் உலக் உடன் விளையாடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது.

மூன்று நர்சுகள்: இந்நிலையில் நயன்தாராவின் ஹாங்காங் பயணம் குறித்து தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் கோடை விடுமுறையை கழிக்க தனது குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுள்ள நயன் மற்றும் விக்னேஷ் தம்பதியினர் குழந்தைகளை கவனித்துக் கொள்ள மூன்று நர்சுகளை அதாவது செவிலியர்களை அழைத்துச் சென்றுள்ளனராம். குழந்தைகளை கவனிப்பதற்காக மட்டுமே இந்த மூன்று செவிலியர்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதி அழைத்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் சில நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நெட்டிசன்கள், குழந்தையை தான் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டீர்கள் உங்களால் குழந்தை கூட பார்த்துக் கொள்ள முடியாதா இதற்கு தனியாக நர்சுகள் தேவையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் குழந்தைகளை வெளிநாடு அழைத்துச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக செவிலியர்களை அழைத்துச் செல்வது நல்ல விஷயம்தான் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

விக்னேஷ் சிவன்: ஹாங்காங் சுற்றுப்பயணம் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தோடு டிஸ்னிவேர்ல்டில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக "போடா போடி படப்பிடிப்பின் போது அனுமதி கேட்டு 12 வருடங்களுக்கு முன் செருப்பு மற்றும் கையில் வெறும் ஆயிரம் ரூபாய் பணத்துடன் இங்கே வந்தேன்" என்று பதிவிட்டு இருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு இணையத்தில் ட்ரெண்டானது. விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்ஸ்சுரன்ஸ் கார்ப்ரேஷன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











