ஃப்ரேம் போட்டு நடு வீட்டுல மாட்டுவோம்! தோனி - சாக்‌ஷியுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நயன் - விக்கி!

மும்பை: இணையத்தை திறந்தாலே வந்து குவியும் தகவல்களாக கடந்த இரு தினங்களாக இருப்பது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இருக்கக்கூடிய மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண தொடர்பாகத்தான். இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல், பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Nayanthara Vignesh Sivan MS Dhoni

தமிழ்நாட்டில் இருந்தும் திரைப்பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அதேபோல் இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இவர்கள் மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவியும் நடிகையுமான நயன்தாராவுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

Nayanthara Vignesh Sivan MS Dhoni

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் தனியாக போஸ் கொடுத்தது. மணமகன் ஆனந்த் அம்பானியுடன் நடனமாடியது, அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணக்கம் சொன்னது உள்ளிட்ட பல நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

Nayanthara Vignesh Sivan MS Dhoni

விக்கி - நயன்: இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்ண்ட் திருமண விழாவின்போது எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவியும் நடிகையுமான நயன்தாராவுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், எனது வீட்டில் மிகப்பெரிய ஃப்ரேமில் இருக்கக்கூடிய புகைப்படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நயன்தாரா கேப்டன் கூல் உடன் இருக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.

Nayanthara Vignesh Sivan MS Dhoni

சி.எஸ்.கே: தோனியின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவனின் இந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டி நடைபெறும்போது மைதானத்திற்கு நேரடியாகச் சென்று தனது ஆதரவை சென்னை அணிக்கு விக்கி - நயன் தம்பதியினர் வழங்கி வருவதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மண்ணாங்கட்டி: இந்நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை விக்னேஷ் சிவன் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் தற்போது எல்.ஐ.சி என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கு எல்.ஐ.கே என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேபோல், நயன்தாரா நடிப்பில் அடுத்து, 'மண்ணாங்கட்டி' என்ற படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்தார். இது தொடர்பான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X