நயன் -விக்னேஷ்சிவன் டும் டும் டும் தள்ளிப்போக இதுதான் காரணமாம்.. ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
நயன்தாராவின் திருமணம் தள்ளிப் போவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: நீண்டநாள் காதலர்களாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார் என்பது நாடறிந்த விசயம் தான். தொடர்ந்து இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.
கை நிறையப் படங்களோடு பிசியாக நடித்து வரும் நயன், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காதலருடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
ஆனால், எப்போது திருமணம் என்பது பற்றி மட்டும் இருவரும் அமைதியாக உள்ளனர்.

இது தான் காரணம்:
இந்நிலையில், நயன் - விக்னேஷ் திருமணம் ஏன் தள்ளிப் போகிறது என்பது பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நயன் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

புதிய படங்கள்:
இதனாலேயே தொடர்ந்து புதிய படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகி வருகிறார் எனக் கூறப்படுகிறது. தனி நாயகியாக மட்டுமின்றி, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். தொடர்ந்து அவரது படங்களில் மாபெரும் வெற்றியைத் தந்து வருகின்றன.

63வது படம்:
ஐரா படம் நயனின் 63வது படமாக ரிலீசாக இருக்கிறது. அப்படம் தவிர சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்ஷன் டிராமா என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தளபதி 63:
இவை தவிர விஜய் - அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன். அறிவிப்பு வந்தது தவிர சுமார் 10 படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

3 வருடம்:
இந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், நயன் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவரது திருமணம் நடைபெறும் என்றும் தெரிகிறது. நயன்தாராவுக்கு இப்போது 34 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











