கிறிஸ்துமஸ்க்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து செய்த வேலை... ரசிகர்கள் கொண்டாட்டம்!

Recommended Video

இசைஞானி இளையராஜா ராயல்டி கேட்பது சரி அல்ல - எஸ்.ஏ.சந்திரசேகர்- வீடியோ

சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இருவருக்குள்ளும் காதல் இருந்து வருகிறது.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவினாலும், நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். இருப்பினும் லிவிங் டுகேதர் பாணியில் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.

சுற்றுலா புகைப்படம்

சுற்றுலா புகைப்படம்

மேலும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் இந்தியாவிற்குள்ளும் இருவரும் சுற்றுலா செல்வதும் வழக்கம். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அதுபோல் தற்போது சில புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாரா வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரம் செட் செய்து அலங்கரித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் செல்பி

கிறிஸ்துமஸ் செல்பி

அந்த மரத்திற்கு அருகில் இருந்தபடியே இருவரும் செல்பி எடுத்து அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "கிறிஸ்துமஸ் மரம் செட் செய்துவிட்டோம். இனி எங்கும் கொண்டாட்டம் தான்", என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

இதற்கு நயன்தாரா ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். "வாவ் அற்புதமான ஜோடி, சூப்பர் தலைவி", என்பது உள்பட ஏராளமான கமெண்ட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன. மேலும் நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் சிலர், இந்த புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X