»   »  தனது 'டார்லிங்'கை விஜய்க்கு ஜோடியாக்கும் அட்லீ?

தனது 'டார்லிங்'கை விஜய்க்கு ஜோடியாக்கும் அட்லீ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் இளைய தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் சேர்ந்து நடனம் ஆடுவதற்கு கீர்த்திக்கு கை, கால் உதறுகிறதாம்.

அட்லீ

அட்லீ

தல அல்லது தளபதி படத்தை தான் இயக்குவேன் என ஒற்றைக் காலில் நின்ற அட்லீக்கு விஜய்யின் படமே கிடைத்துள்ளது. பைரவா படத்தை அடுத்து விஜய் அட்லீயின் படத்தில் நடிக்கிறார்.

நயன்தாரா

நயன்தாரா

அட்லீ தனது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீயின் முதல் பட ஹீரோயின் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

விஜய்

விஜய், அட்லீ இணைந்த தெறி படம் சூப்பர் ஹிட்டானது. அதே போன்று அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த ராஜா ராணியும் சூப்பர் ஹிட். இந்நிலையில் இந்த மூன்றும் பேரும் சேர்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லு

வில்லு

நயன்தாரா விஜய்யுடன் சேர்ந்து வில்லு படத்தில் நடித்துள்ளார். மேலும் சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு விஜய்யுன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார்.

டார்லிங்

டார்லிங்

ராஜா ராணி படத்தில் நடிக்கும்போது நயன்தாராவும், அட்லீயும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இதனால் அட்லீ நயன்தாராவை டார்லிங் என்று தான் செல்லமாக அழைப்பார்.

English summary
According to reports, Atlee has decided to make Nayanthara as Vijay's leading lady in Vijay 61.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil