ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் இன்று மாலை திடீரென தியேட்டர் விசிட் அடித்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்களை அந்த படக்குழுவினர் தியேட்டருக்கே சென்று சந்தித்துள்ளனர்.

நயன்தாரா, விஜய்சேதுபதியை பார்த்ததுமே ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து விசில் அடித்து வரவேற்றனர்.

எந்த தியேட்டர்

எந்த தியேட்டர்

சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் திடீர் விசிட் அடித்தனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி வருவதை அறிந்ததும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

நல்ல ரெஸ்பான்ஸ்

நல்ல ரெஸ்பான்ஸ்

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் செம ஃபன் ரைடாக உள்ளதால் மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் அப்படியொரு ஜாலியான படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார்.

ரசிகர்களுடன் நயன்தாரா

ரசிகர்களுடன் நயன்தாரா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த நயன்தாரா, தற்போது படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதை பார்த்து ரசிகர்களுடன் படம் பார்க்க தேவி தியேட்டருக்கு வந்துள்ளார். நயன்தாராவை தியேட்டரில் பார்த்த ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியானது. பலரும் தலைவி, லேடி சூப்பர்ஸ்டார் என கத்தி கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தனர். நயன்தாராவும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

மக்கள் செல்வன் மாஸ்

மக்கள் செல்வன் மாஸ்

காரில் இருந்து இறங்கியதில் இருந்தே விஜய்சேதுபதியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். தியேட்டருக்கு விசிட் அடித்த விஜய்சேதுபதி படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் படத்தை பார்த்து மகிழ்ந்தார். ராம்போவாக கலக்கி உள்ள விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

கேக் கட்டிங்

கேக் கட்டிங்

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் இணைந்து தியேட்டரில் கேக் வெட்டியும் படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். தியேட்டர் விசிட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி நயன்தாரா, விஜய்சேதுபதி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தா மிஸ்ஸிங்

சமந்தா மிஸ்ஸிங்

காஷ்மீரில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்து வரும் சமந்தா இந்த தியேட்டர் விசிட்டுக்கு வரவில்லை. முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இருந்தார். கதீஜா எங்கே காணோம் என சமந்தா ரசிகர்கள் தியேட்டரில் கூச்சலிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X