கணேஷ் வெங்கட்ராமுடன் காதல் என செய்தி.. மீடியா மீது நயன்தாரா கோபம்!
சென்னை: தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா எச்சரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிக அளவு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் நயன்தாராவாகத்தான் இருக்கும்.
சிம்பு, தனுஷ், பிரபு தேவா என சில ஹீரோக்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அவர், இப்போது ஹீரோ அல்லாத குணச்சித்திர நடிகருடன் சேர்த்து பேசப்படுகிறார்.

கணேஷ் வெங்கட்ராம்
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் "தனி ஒருவன்". இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். படத்தில் நயன்தாராவின் நண்பராக நடித்து வருகிறார்.

நெருக்கம்
நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் இருவரும் உண்மையில் நெருங்கி பழகுவதாகவும், பல மணி நேரம் தனிமையில் பேசிக்கொள்வதாகவும், பட யூனிட்டில் உள்ள யாரோ சிலர் வதந்தியைப் பரப்பிவிட்டுள்ளனர்.

செய்தி
இந்த வதந்தி பரபரப்புச் செய்தியாக இணையத்தில் உலாவர ஆரம்பித்துள்ளது. இது நயன்தாராவுக்குத் தெரிந்தபோது கடும் கோபம் அடைந்தார். தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே
கணேஷ் வெங்கட்ராம் பற்றி ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்துள்ளன. பெரிய இடத்துப் பெண்கள் விவகாரத்தில் அவர் பெயர் அடிபடுவதாகக் கூறப்படும் நிலையில், நயன்தாராவுடன் அவருக்கு காதல் என வதந்தி கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











