Nayanthara - நான் இல்லாமல் உனக்கு அதை செய்ய அனுமதி இல்லை.. விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா அதிரடி
சென்னை: Nayanthara (நயன்தாரா) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா எச்சரிக்கை கொடுத்த போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போதைய படங்கள்: நயன்தாரா நடிப்பில் கடைசியாக தமிழில் இறைவன் படம் வெளியானது. இதனையடுத்து தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜ, மண்ணாங்கட்டி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார். அவருக்கு விக்னேஷ் சிவனும் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார்.
ஜவான்: இதற்கிடையே அவர் ஹிந்தியில் ஜவான் படத்தில் நடித்தார். ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக நயனின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. ஜவான் படம் கொடுத்த வெற்றியின் காரணமாக ஹிந்தியில் மேலும் ஒரு படத்தில் நயன் தாரா கமிட்டாகியிருக்கிறார் என்றும் அந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க ரன்வீர் சிங்கும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
எச்சரித்த நயன்: இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவனை எச்சரித்தது ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் சமீபத்தில் மும்பை சென்றபோது அங்கு ஒரு உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறார். அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் மும்பைக்கு வரும்போது எப்போதும் சாப்பிடும் உணவு. மிகவும் பிடித்த உணவு. என் சில்லி பார்ட்னர் நயனை மிஸ் செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த நயன்தாரா, நான் இல்லாமல் இதை செய்ய உனக்கு அனுமதியில்லை என்று செல்லமாக எச்சரித்திருக்கிறார். நயன் ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











