யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்கிய விக்னேஷ் சிவன்.. கடைசியில் செம காமெடி!

சென்னை : நடிகை நயன்தாரா யானையைப் பார்த்து பயந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

பொங்கல் வைத்த Nayanthara, திருமணத்திற்கு தயாராகும் Nayan-Wikki #Kollywood | FilmiBeat Tamil

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் பற்றி தான் தற்போது டாக் ஆப் த டவுனாக உள்ளது.

ஜூன் 9ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகிலுள்ள ஒரு மடத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

குலதெய்வ கோவில்

குலதெய்வ கோவில்

இதையடுத்து, தஞ்சாவூர் அருகே உள்ள ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று மதியம் வந்தனர். நயன்தாரா கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கருவறையில் இருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை இருவரும் வழிபட்டனர்.

ரசிகர்களுடன் செல்ஃபி

ரசிகர்களுடன் செல்ஃபி

நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து, கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகம் வந்திருந்தது. இரண்டு மணி நேரம், கோவிலில் இருந்த கிராம மக்களுடன் இருவரும் பேசினர். ரசிகர்கள், நடிகை நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

யானையை பார்த்து பயந்த நயன்தாரா

யானையை பார்த்து பயந்த நயன்தாரா

தஞ்சாவூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். கோவிலில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கோவில் யானையை வணங்கினர். அங்கிருந்தவர்கள் கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கும் படி கூறினர்.

டிராண்டாகும் வீடியோ

டிராண்டாகும் வீடியோ

ஆனால், நயன்தாரா யானையை பார்த்து பயந்து , விக்னேஷ் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். விக்னேஷ் சிவனும் சிறிது தயக்கத்துடன் வாழைப்பழத்தை யானைக்கு கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட் என வீடியோவை வைரலாக்கி வருகின்றர். சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ டிராண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X