நயன்தாரா தான் முதலில் திருப்பதி படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தார்.. இயக்குநர் பேரரசு
சென்னை : தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த இயக்குனர் பேரரசு
விஜய் அஜித் விஜயகாந்த் பரத் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய பேரரசு இப்பொழுது விஜய்க்காக கதை ஒன்றை தயார் செய்து வெயிட்டிங்கில் உள்ளார்
இந்த நிலையில் தனியாக யுடியூப் சேனல் நேர்காணலில் பேசிய பேரரசு திருப்பதி படத்தில் நயன்தாரா தான் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

ஊர் பெயரை டைட்டிலாக
பொதுவாக தமிழில் இயக்குனர்கள் டைட்டில் கார்டில் தான் ஊர்களின் பெயரை குறிப்பிட்டு தொடங்குவார்கள் ஆனால் ஊர் பெயரை டைட்டிலாக வைத்து அனைவரையும் அசர வைத்தவர் இயக்குனர் பேரரசு விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திருப்பாச்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

விஜய் பேரரசு கூட்டணியில்
மேலும் அதுவரை சாப்டான கதைகளில் நடித்து வந்த விஜய்க்கு திருப்பாச்சி திரைப்படம் ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்று தந்தது விஜய் பேரரசு கூட்டணியில் வெளியான முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக உடனடியாக இணைந்த திரைப்படம் சிவகாசி இந்த முறை சிட்டி பேசில் படத்தை இயக்கியிருப்பவர் இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

முதலில் நயன்தாரா ஹீரோயினாக
இவ்வாறு விஜய்க்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பேரரசு அஜித்துடன் இணைந்து திரைப்படம் திருப்பதி. கமர்சியல் ரீதியாக இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சதா நடித்து இருப்பார் லைலா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு செல்வார். ஆக்ஷன் காதல் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியானது திருப்பதி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் அணுகினார்களாம்.

வெயிட் பண்ண முடியாது
ஆனால் நயன்தாரா அப்பொழுது தெலுங்கு படமொன்றில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் நயன்தாராவே கொஞ்ச நாளில் இந்த படத்தை முடித்துவிட்டு உங்க படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்றும் கேட்டாராம். ஆனால் அவ்வளவு நாள் வெயிட் பண்ண முடியாது என நயன்தாராவுக்கு பதிலாக நடிகை சதாவை ஒப்பந்தம் செய்ததாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேரரசு இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











