நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்: 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து அளித்து அசத்தல்!!
சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபாலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் எனும் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Recommended Video
காலை 8.30 மணி முதல் திருமண விழா ஆரம்பமாகும் என டிரெண்டாகி வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு இந்த திருமணத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வைக்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜே டு லேடி சூப்பர்ஸ்டார்
கேரளாவில் சாதாரண டிவி தொகுப்பாளராக இருந்து வந்த டயானா மரியம் குரியன் 2003ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசின்னக்கரே படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2005ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்த நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வருகிறார்.

நயன்தாராவுக்கு திருமணம்
ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், கார்த்தி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் இன்று நடைபெற உள்ள நயன்தாரா திருமணத்தில் குறிப்பிட்ட விஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து
ரசிகர்களுக்கு அனுமதி இல்லையே என்பதால் வருத்தம் அடைந்த ரசிகர்கள், தற்போது நயன்தாரா தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது திருமண நாள் அன்று மதிய விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்கிற தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பல இதயங்களும் இதன் காரணமாக வாழ்த்து தெரிவித்து வருகிறது.

கூட்டினால் 9
18 - 1+8 + 9 என்கிற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்கான ஏற்பாடுகளை நயன்தாரா செய்துள்ளார் என்கிற தகவல் அறிந்ததும் ரசிகர்கள் #Nayanthara, #Nayantharawedding என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து லேடி சூப்பர்ஸ்டாரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











