நயன்தாரா திருமண வீடியோ..நெட்ஃபிக்ஸ் என்ன திருமணம் வீடியோ வெளியிடும் தளமா? கிண்டலடித்த நெட்டிசன்ஸ்!

சென்னை : நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்களா என நெட்ஃப்ளிக்ஸ் கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் ஏடாகூடமான பதிலளித்துள்ளனர்.

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன். நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் வரும் "தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே" என்ற பாடல் விஜய்சேதுபதிக்கு ஒர்க்கவுட் ஆகியதோ இல்லையோ விக்னேஷ் சிவனுக்கு நன்றாக ஒர்க்கவுட்டாகி இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது.

நயன்தாரா விக்கி

நயன்தாரா விக்கி

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், அனைவரின் கண்படும் அளவுக்கு இருவரும் க்யூட் ஜோடியாக வலம் வந்தனர். கோவில்கள், சினிமா நிகழ்ச்சி, குடும்பவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என எதுவானாலும், இவர்கள் இருவரும் கைபிடித்துக்கொண்டு நிற்பதை பார்த்தாலே, அடடா... காதலித்தால் இப்படி காதலிக்க வேண்டும் என்று காதலிக்கும் இளசுகளுக்கு சற்று பொறாமையாவே இருக்கும்

தடபுடலான கல்யாணம்

தடபுடலான கல்யாணம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதல் புறாவாக சுற்றிவந்த இந்த காதல் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். மகாபலிபுரம் ரிசாட்டில் தடபுடலாக இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, அனிருத், சூர்யா, ஷாருக்கான், அட்லி ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்று மட்டுமே தகவல்கள் வெளிவந்தன.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலி கட்டும் ஒரு சில புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து இருந்தார். நயன்தாரா தனது திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ25 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதால் இத்தனை கெடுபிடி காட்டப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பொத்தி பொத்தி வைத்திருந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

நயன்தாரா விக்கி திருமணம்

நயன்தாரா விக்கி திருமணம்

அதாவது நயன்தாரா தனது திருமணத்தை வைத்து பக்கா பிசினஸ் பிளான் போட்டு நெட்பிளிஸ் நிறுவனத்திற்கு விற்று இருந்தார். திருமணமாகி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டால், விக்கி ஒரு சில முக்கியமான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனால்,கடுப்பான நெட்பிளிக்ஸ் ரூ.25 கோடி ஒப்பந்ததை ரத்து செய்தாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அது உண்மையில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, நெட்ஃபிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா திருமணத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்களா? என கேட்டிருந்தது.

திருமண வீடியோ வெளியீடும் தளமா?

திருமண வீடியோ வெளியீடும் தளமா?

இதற்கு ஒரு சில இணையவாசிகள் திருமண வீடியோவை 25 கோடிக்கு வாங்குவது தேவையில்லாத ஒன்று, இந்த பணத்திற்கு தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெப் தொடர்களை டப்பிங் செய்து இருக்கலாம். புதியதாக திரைப்படங்கள், புதிதாக தொடர்கள் போன்றவற்றை தயாரித்து இருக்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் என்ன நிச்சயதார்த்தம், திருமண வீடியோக்களை வெளியீடும் தளமா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X