Nayanthara - ஆரம்பித்தது பஞ்சாயத்து.. சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் நயன்தாரா?

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு சிலரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியதாக கோலிவுட்டில் தகவல் பரபரத்துகொண்டிருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். நயன்தாராவுக்கு அது முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara went to temple and tried to Convince Vignesh Shivan Relations

நயனின் காதல்: நயன்தாரா நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் பல வருடங்களாக காதலித்து லிவிங் டூ கெதரில் வசித்துவந்தனர். இதனையடுத்து எப்போது இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்குரிய சமிக்ஞையை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கொடுக்காமல் இருந்தனர் இரண்டு பேரும்

திருமணம்: இந்தச் சூழலில் கடந்த வருடம் ஜுன் மாதம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் வந்திருந்தனர். மிக பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம் அப்போது தலைப்பு செய்தியாக இருந்தது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

Nayanthara went to temple and tried to Convince Vignesh Shivan Relations

குழந்தைகள்: திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் எதிலும் பிரச்னைகளை சந்திக்கும் நயனுக்கு வாடகை தாய் விவகாரமும் பிரச்னையை கிளப்பியது. இருப்பினும் அவர்கள் எந்த விதியையும் மீறவில்லை; 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என தெரியவந்ததை அடுத்து அந்த விவகாரம் ஓய்ந்தது. ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும், மற்றொரு மகனுக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

சொந்தபந்தத்துக்குள் சண்டை?: விக்னேஷ் சிவன் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது குல தெய்வமும் அங்குதான் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவனின் சொந்த பந்தங்கள் யாருமே மதிக்கப்படவில்லை என இருவரது திருமணத்தின்போதே சர்ச்சை எழுந்தது. குறிப்பாக விக்னேஷ் சிவன் தனது சொந்த ஊரையும், சொந்தத்தையும் மொத்தமாகவே மறந்துவிட்டார் எனவும் ஒரு தகவல் பரவியது.

ஏன் குல தெய்வ விசிட்?: இந்நிலையில் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இருக்கும் மேல்வளத்தூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலுக்கு இரண்டு பேரும் சென்றனர். திடீரென குல தெய்வ கோயில் விசிட் எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது திருமணம் முடிந்ததில் இருந்தே விக்னேஷ் சிவனின் சொந்தபந்தங்கள் கொஞ்சம் மனஸ்தாபத்தோடு இருந்ததாக கூறப்படுகிறது.

சமாதானம்?: இதனால் அப்செட்டான நயன்தாரா ஒரு ஜோதிடரை பார்த்ததாகவும், அவர் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்துதான் குல தெய்வ கோயிலுக்கு சென்ற அவர்கள்; பரிகாரத்தை முடித்த கையோடு சொந்த பந்தங்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கினார்களாம்.

இவர்களது சமாதான உடன்படிக்கையை அவர்களும் ஏற்றுக்கொண்டதால் நயனும், விக்னேஷ் சிவனும் மன நிறைவோடு ஊர் திரும்பினார்கள் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X