மூக்குத்தி அம்மன் பட பூஜை.. கேரவனில் ரெஜினாவை நயன்தாரா மிரட்டினாரா? பிரபலம் சொல்வது என்ன?

சென்னை: மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை கடந்த வாரம் நடைபெற்றது. இதில், குஷ்பு, மீனா, ரெஜினா கசாண்ட்ரா நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் நயன்தாரா மீனாவை இன்சல்ட் செய்யும் வகையில் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று இணையத்தில் பேசு பெருளாகி இருக்கும் நிலையில், பிரபலம் ஒருவர் கெரவனில் நயன்தாரா செய்த விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

நயன்தாரா விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதையா? நயன்தாரா ஒரு பேட்டியில் சந்திரமுகி படத்தில் நான் நடிக்கும் போது, ரஜினி மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்று எனக்கு தெரியாது என்று சொல்லி இருந்தார். அன்னைக்கு பிடித்தது நயன்தாராவுக்கு சனியன். அன்றிலிருந்து நயன்தாராவின் அழிவு காலம் ஆரம்பமாகி, கடந்த ஓராண்டாகவே அவர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சந்திரமுகி படத்தில் மட்டும் அன்று நயன்தாராவை நடிப்பதற்கு ரஜினி அனுமதிக்கவில்லை என்றால், இன்று நயன்தாரா யார் என்று பலருக்கு தெரிந்திருக்காது. அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றவர் தான் நயன்தாரா. ஆனால், நயன்தாரா, எனக்கு ரஜினி யார் என்று தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதே, மம்முட்டி, மோகன்லால், ஷாருக்கானை தெரியாது என்று சொல்லி இருப்பாரா?

Mookuthi Amman 2 Nayanthara regina

டார்ச்சர் செய்யும் நயன்தாரா: நாளுக்கு நாள் நயன்தாராவின் டார்ச்சர் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்ணாத்த படத்தில் நயன்தாரா, ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே திரைப்படத்தில் ரஜினியின் முறை பெண்ணாக குஷ்பூ, மீனா இருவரும் நடித்திருந்தார்கள். கதை படி அந்த படத்தில் இருவரும் ஒன்றாக படம் முழுக்க டிராவல் செய்யும் வகையில் தான் கதை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நயன்தாராவோ, இவர்களின் கதாபாத்திரம் எதற்கு என்று இயக்குனரை டார்ச்சர் செய்து, கடைசியில் அவர் கதையை அப்படியே மாற்றி, முதல் பாதியில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மீனா,குஷ்புவை நடிக்க வைத்தார். இதை குஷ்பு கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Mookuthi Amman 2 Nayanthara regina

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்: அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என டைட்டில் வரும் போது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என டைட்டிலை போடும் படி டார்ச்சர் செய்து இருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் போட வேண்டும் என இயக்குனரிடம் மல்லுக்கட்ட அவர் தயாரிப்பாளரிடம் முறையிட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து, இந்த விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் காதுக்கு செல்ல, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லி இருக்கிறார்.

இப்படி மற்றவர்களை டார்ச்சர் செய்து லேடி சூப்பர் ஸ்டார் என்றபட்டத்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா, அந்த பட்டத்தில் எனக்கு விருப்பமே இல்லை. போடவேண்டாம் என்று சொன்னாலும் பலர் போட்டு விடுகிறார்கள். இனிமேல் அந்த பட்டப்பெயரை பயன்படுத்தக்கூடாது என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி பேசுவதையே நயன்தாரா வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவர் உண்மையில் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே தெரியாமல், கடந்த ஒரு வருடமாகவே ஒருவிதமான குழப்பத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் நயன்தாராவின் மார்கெட் சரிந்தது தான்.

Mookuthi Amman 2 Nayanthara regina

தனியாக கெரவன்: இதே வேலையை தான் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் செய்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாவும் ரெஜினாவும் நடிக்கிறார்கள். மீனா ஏற்கனவே பல சாமி திரைப்படங்களில் நடித்திருப்பதால் அவரும் இந்த திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். பட பூஜையில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா தனியாக கெரவன் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், பட பூஜையில் தனக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும் என நினைத்து இருந்த நிலையில், தனக்கு மட்டும் தான் முன்னுரிமை முதல் மரியாதை செய்வார்கள் என்று நயன்தாரா எண்ணிய நிலையில் அங்கு மீனா, குஷ்பூ, ரெஜினா என எல்லா நடிகைகளுக்கும் பொன்னாடை போர்த்தியது நயந்தாராவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Mookuthi Amman 2 Nayanthara regina

ரெஜினாவை மிரட்டிய நயன்: நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. நயன்தாரா மேடையில் இருந்த போது ரெஜினா, தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதனால், மேலும் கடுப்பான நயன்தாரா கெரவனுக்கு வந்து ரெஜினாவுக்கு போன் போட்டு, என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை போட்டோ எடுத்தாய் என மிரட்டி இருக்கிறார். இதனால் ரெஜினா அழாத குறையாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இப்படி இந்த பட பூஜையில் ஒருவரையும் விடாது அனைவரையும் இன்சல்ட் செய்திருக்கிறார் நயன்தாரா. இதனால், சுந்தர் சிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு ஓரமாக சென்று நின்று விட்டார்.

வளர்ச்சி இல்லை : நயன்தாராவை எந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ தற்போது நயன்தாராவை பலரும் திட்டி வருகின்றனர். நயன்தாராவுக்கு தலைக்கனம் அதிகமாகிவிட்டது இதனால், இனிமேல் நயன்தாராவுக்கு வீழ்ச்சி தானே தவிர வளர்ச்சி இல்லை. தயாரிப்பாளராக இருந்தாலும், சக நடிகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும் யாராக இருந்தாலும், அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதே மனபாவத்துடன் நயன்தாரா சென்று கொண்டு இருந்தால், அவருடைய வீழ்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. இதை தயவு செய்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அவரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில், நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம் புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவாளராகவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். முதல் பாகம் பாடமாக்கப்பட்ட போது நயன்தாரா விரதம் இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பூஜை போடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே குடும்பத்தோடு விரதம் இருந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X